»   »  சத்யராஜ்-சிபிராஜின் 'ஜாக்சன் துரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சத்யராஜ்-சிபிராஜின் 'ஜாக்சன் துரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீண்ட இடைவேளைக்குப் பின் சத்யராஜ்-சிபிராஜ் இணைந்து நடித்திருக்கும் ஜாக்சன் துரை திரைப்படம் வருகின்ற 17ம் தேதி வெளியாகிறது.

ஜோர், வெற்றிவேல்-சக்திவேல், மண்ணின் மைந்தன், கோவை பிரதர்ஸ் படங்களைத் தொடர்ந்து சத்யராஜ்-சிபிராஜ் இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் ஜாக்சன் துரை.


Jackson Durai Release Date

பர்மா புகழ் தரணிதரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சத்யராஜுடன் இணைந்து சிபிராஜ், கருணாகரன், பிந்து மாதவி ஆகியோர் நடித்துள்ளனர்.


போலீஸ் அதிகாரியான சிபிராஜை ஒரு கிராமத்தின் பிரச்சினையைத் தீர்க்க அனுப்பி வைக்கின்றனர். அங்கே சில அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெற அதிலிருந்து சிபிராஜ் அந்தக் கிராமத்தை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.


முதன்முறையாக சத்யராஜ் பேய் வேடமேற்று நடித்திருக்கும் இப்படம் வருகின்ற ஜூன் 17 ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


சித்தார்த் விபின் இசையமைத்திருக்கும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

English summary
Sibiraj's Jackson Durai Release Date now Revealed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil