»   »  விரைவில் மும்பை தொழில் அதிபர்கள் பட்டியலில் சேரும் நடிகை

விரைவில் மும்பை தொழில் அதிபர்கள் பட்டியலில் சேரும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கொழும்புவை அடுத்து மும்பையிலும் உணவகம் துவங்க திட்டமிட்டுள்ளார் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ்.

இலங்கையை சேர்ந்தவர் ஜாக்குலின் பெர்ணான்டஸ். மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார்.

Jacqueline Fernandes to start an eatery in Mumbai

மேலும் இரண்டு இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் இலங்கை தலைநகர் கொழும்புவில் கீமா சூத்ரா என்ற பெயரில் கடந்த ஆண்டு உணவகம் துவங்கினார்.

இந்நிலையில் மும்பையிலும் உணவகம் துவங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக பந்த்ரா பகுதியில் கட்டிடம் ஒன்றை வாங்கி உணவகத்திற்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டிருக்கிறாராம்.

தனது உணவகத்தில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளாராம் ஜாக்குலின்.

English summary
Bollywood actress Jacqueline Fernandes is going to start an eatery in Mumbai. She has bought a plush property for this reason in Bandra.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil