மோசடி மன்னனுடன் நெருக்கமான போட்டோ...ஜாக்குலின் என்ன சொல்லிருக்கார் பாருங்க

மும்பை : பண மோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருந்த அந்தரங்க போட்டோக்கள் இணையத்தில் வெளியானது பற்றி இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார் ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்.

Recommended Video

Jacqueline Fernandez-ஐ நூதனமாக ஏமாற்றிய மர்ம நபர்? யார் இந்த Sukesh Chandrasekhar

இலங்கையை சேர்ந்த பிரபல மாடலான ஜாக்குலின் பெர்ணான்டஸ் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் ஹாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். கான்மேன் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தான் ஜாக்குலினுக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு பெற்று தந்துள்ளார்.

வலை விரித்த சுகேஷ்

வலை விரித்த சுகேஷ்

பாலிவுட்டில் பல பிரபலங்களை கைக்குள் வைத்திருக்கும் சுகேஷ், பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஜாக்குலினை தனது வலையில் விழ வைத்துள்ளார். சொன்னபடியே ஜாக்குலினுக்கு பட வாய்ப்புக்களையும் பெற்று தந்துள்ளார்.

பணமோசடி விவகாரம்

பணமோசடி விவகாரம்

ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் ப்ரமோட்டர்களிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடி விவகாரத்தில் ஜாக்குலினுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறையில் சமீபத்தில் விசாரணை நடத்தினர். இலங்கை செல்ல இருந்த ஜாக்குலினை விமான நிலையத்திலேயே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

வெளியான அந்தரங்க போட்டோ

வெளியான அந்தரங்க போட்டோ

ஆனால் விசாரணையின் போது தனக்கும் சுகேஷிற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி வந்தார் ஜாக்குலின். இந்நிலையில் ஜாக்குலினும் சுகேஷும் படுக்கையில் நெருக்கமாக இருந்த அந்தரங்கமான பல போட்டோக்கள் இன்று இணையத்தில் தீயாய் பரவின. இந்த போட்டோக்களால் ஜாக்குலினுக்கு மேலும் சிக்கல் அதிகரிக்கலாம் என கூறப்பட்டு வந்தது.

ஜாக்குலின் சொன்ன விளக்கம்

ஜாக்குலின் சொன்ன விளக்கம்

இந்நிலையில் இந்த போட்டோக்கள் பற்றி விளக்கம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜாக்குலின். அதில், இந்த நாடும் நாட்டு மக்களும் எப்போதும் எனக்கு மிகுந்த மரியாதை மற்றும் அன்பை கொடுத்துள்ளனர். இதில் எனது மீடியா நண்பர்களும் அடங்குவர். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். நான் தற்போது கடினமான சூழ்நிலையில் உள்ளேன். ஆனால் எனது நண்பர்களும் ரசிகர்களும் என நம்புவார்கள் என எனக்கு தெரியும்.

போட்டோவை பகிராதீர்கள்

போட்டோவை பகிராதீர்கள்

இந்த நம்பிக்கையுடன் எனது தனியுரிமை மற்றும் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பு எனது நண்பர்கள் யாரும் எனது தனிப்பட்ட போட்டோக்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். உங்களின் அன்பானவர்களுக்கு இதை ஒரு போதும் நீங்கள் செய்ய மாட்டீர்கள் தானே. அதே போல் எனக்கும் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன். நீதியும், நல்ல மனமும் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார் ஜாக்குலின்.

வெளியிட்டது யாருன்னு தெரியுமா

வெளியிட்டது யாருன்னு தெரியுமா

அதே சமயம் இந்த போட்டோ தொடர்பாகவோ, சுகேஷுக்கும் தனக்கும் இடையே இருக்கும் உறவு பற்றியோ ஜாக்குலின் எதுவும் குறிப்பிடவில்லை. இந்த அந்தரங்க போட்டோக்களை வெளியிட்ட யார் என தெரியும் என்ற தோணியில் ஜாக்குலின் அளித்துள்ள இந்த விளக்கம் மேலும் பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X