»   »  கோலமாவு கோகிலா... நயன்தாராவுடன் கைகோர்க்கும் சின்னத்திரை ஜாக்குலின்!

கோலமாவு கோகிலா... நயன்தாராவுடன் கைகோர்க்கும் சின்னத்திரை ஜாக்குலின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நிறைய பிரபலங்கள் நடிக்க வந்துவிட்டனர். அவர்களில் சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த் ஆகியோர் ஹீரோவாக நடித்து வருகின்றனர்.

சீரியல்களில் நாயகியாக நடித்துவந்த ப்ரியா பவானி ஷங்கர் 'மேயாத மான்' படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த வரிசையில், சின்னத்திரையில் இருந்து புறப்பட்டு சினிமாவில் கலக்க இருக்கிறார் தொகுப்பாளினி ஜாக்குலின்.

Jacqueline to star with nayanthara

நயன்தாரா நடிக்கும் 'கோலமாவு கோகிலா' படத்தில் தான் ஜாக்குலின் நடிக்க இருக்கிறாராம். அதுவும் நயன்தாராவுடன் முழுக் கதையிலும் ஜாக்குலின் வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனில், அவர் தொடர்ந்து டி.வி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவாரா என்பது தெரியவில்லை.

சின்னத்திரை நடிகைகள் பலர் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக நடித்து வருகிறார்கள். ஜாக்குலினும் இந்தப் பட்டியலில் இணைவாரா என்பதை அவரது முதல் படம்தான் தீர்மானிக்கப் போகிறது.

English summary
Jacqueline is going to act in cinema. Jacqueline is acting in the film 'Kolamavu Kokila' which will be lead by Nayanthara.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil