»   »  'நான் ஒரு பொறுக்கி'...பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஜெகபதி பாபு

'நான் ஒரு பொறுக்கி'...பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஜெகபதி பாபு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்லூரி நாட்களில் நான் ஒரு பொறுக்கியாக இருந்தேன் என வில்லன் நடிகர் ஜெகபதி பாபு தெரிவித்திருக்கிறார்.

அர்ஜுன் நடித்த 'மதராஸி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெகபதி பாபு. தொடர்ந்து 'புத்தகம்', 'தாண்டவம்', 'லிங்கா' போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.

Jagapathi Babu Like to act Ajith

சில மாதங்களுக்கு முன் செல்வராகவன் இயக்கத்தில் 'கான்' படத்தில் இவர் நடித்து வந்தார். இடையில் சில காரணங்களால் கான் வளராமல் நின்று விட்டது.

தற்போது விஜய் 60 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது. டேனியல் பாலாஜி, ஹரிஷ் உத்தமன் ஆகியோருடன் இணைந்து விஜய்யை மிரட்டும் வில்லனாக நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் ஜெகபதி பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் ''பள்ளி நாட்களில் நான் மிகவும் அமைதியானவனாக இருந்தேன். ஆனால் கல்லூரி நாட்களில் என்னால் அப்படி இருக்க முடியவில்லை.

என்னை எல்லோரும் பொறுக்கி என்றுதான் கூப்பிடுவார்கள் சொல்லப்போனால் நான் ஒரு சென்னை பொறுக்கியாக இருந்தேன்'' என்று கூறியிருக்கிறார்.

மேலும் அஜீத்துடன் இணைந்து நடிக்கக் காத்திருப்பதாகவும் ஜெகபதி பாபு தெரிவித்திருக்கிறார்.

English summary
'I wish to Act along with Ajith' Actor Jagapathi Babu says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil