Just In
- 2 hrs ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 7 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 8 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- News
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.. சென்னைக்குள் என்ட்ரியாக முடியாமல் பரிதவிக்க வைத்த டிராபிக் ஜாம்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தொடங்கியது லிங்கா படப்பிடிப்பு... ரஜினிக்கு வில்லன் தெலுங்கு ஜெகபதிபாபு!
லிங்கா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு.
கோச்சடையான் படத்துக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்துக்கு லிங்கா என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடிகளாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

மைசூரில்...
படப்பிடிப்பு மைசூரில், செவ்வாய்கிழமை தொடங்கியது. இதற்காக, ரஜினிகாந்த் செவ்வாய்கிழமை மைசூர் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் 40 நாட்கள் தங்கியிருந்து, ‘லிங்கா' படத்தில் நடிக்கிறார்.

வில்லன் யார்?
ரஜினிகாந்த் 'லிங்கா'வின் வில்லன் யார் என்பது சஸ்பென்ஸாக இருந்தது. தெலுங்கில் பிரபல நடிகராக விளங்கும் ஜெகபதி பாபுதான் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் என்பதை கே எஸ் ரவிக்குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒரு பாடல் முடிஞ்சிருச்சி...
எந்திரன் படத்தில் பணிபுரிந்த ரத்னவேலுதான், லிங்காவுக்கு ஒளிப்பதிவாளர். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ரஜினி - சோனாக்ஷி சின்ஹா பாடும் டூயட் பாடல் ஒன்றை முடித்துக் கொடுத்துவிட்டாராம் ரஹ்மான். ரஜினிக்கான அறிமுகப் பாடல் உருவாக்கும் பணியில் இப்போது ஈடுபட்டுள்ளார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.

முத்து, படையப்பாவுக்குப் பிறகு
முத்து, படையப்பா படங்களுக்குப் பிறகு கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படம் இது. முழுக்க முழுக்க காமெடி, ஆக்ஷன், காதல், குடும்ப சென்டிமென்ட் ஒரு பக்கா பொழுதுபோக்குப் படமாக லிங்கா உருவாகிறது.

ரவிக்குமார் வீட்டில் ரஜினி
அதே நேரம் வழக்கமாக பார்முலா கதை மாதிரி இருக்கக் கூடாது என்பதிலும் ரஜினி மிகுந்த கவனமாக உள்ளாராம். இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தின் போது, கே எஸ் ரவிக்குமாருடன் ரஜினியும் இருந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேல் தினசரி கே எஸ் ரவிக்குமார் வீட்டுக்கே போய், திரைக்கதையை உருவாக்கியுள்ளார் ரஜினி.