»   »  என்னாது 29 ஆ...: இந்த செய்தியை கேட்டு இப்பவே கண்ணை கட்டிப் போய் கிடக்கும் ரசிகர்கள்

என்னாது 29 ஆ...: இந்த செய்தியை கேட்டு இப்பவே கண்ணை கட்டிப் போய் கிடக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரன்பிர் கபூர் நடித்துள்ள ஜக்கா ஜசூஸ் படத்தில் 29 பாடல்கள் உள்ளதாம்.

அனுராக் பாசு இயக்கத்தில் ரன்பிர் கபூர், கத்ரீனா கைஃப் நடித்துள்ள படம் ஜக்கா ஜசூஸ். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே காதலர்களாகிய ரன்பிரும், கத்ரீனாவும் பிரிந்துவிட்டனர்.

அதன் பிறகு ஒரு பிரேக் விட்டு படத்தில் தொடர்ந்து நடித்தனர். படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

காதல் முறிவுக்கு பிறகு ரன்பிரும், கத்ரீனாவும் படப்பிடிப்பு தளத்தில் ஒருவரையொருவர் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டனர். இதை பார்த்து இயக்குனருக்கு பிபி ஏறியது தான் மிச்சம்.

பாடல்கள்

பாடல்கள்

தற்போது ஒரு படத்தில் 5 பாடல்கள் தான் உள்ளன. இந்நிலையில் ஜக்கா ஜசூஸ் படத்தில் 29 பாடல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. 29 பாடல்களா என்று ரசிகர்களுக்கு இப்பவே கண்ணை கட்டிவிட்டது.

சல்மான் கான்

சல்மான் கான்

1994ம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான ஹம் ஆப் கே ஹைன் கோன் படத்தில் 14 பாடல்கள் இருந்ததே ஒரு படத்தில் அதிகபட்ச பாடல்களாக இருந்தது. தற்போது ஜக்கா ஜசூஸ் அந்த சாதனையை முறியடித்துள்ளது.

பிரச்சனை

பிரச்சனை

உங்கள் பிரச்சனையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு படத்தை விளம்பரம் செய்யுங்கள் என இயக்குனர் அனுராக் பாசு ரன்பிர், கத்ரீனாவிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம். அதன் பிறகே இருவரும் சேர்ந்து படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள்.

English summary
Ranbir Kapoor, Katrina Kaif's upcoming movie Jagga Jasoos directed by Anurag Basu has 29 songs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil