»   »  ‘ஒறுத்தல்’... ஜெய்ஆகாஷ் இனி விநியோகஸ்தரும் கூட!

‘ஒறுத்தல்’... ஜெய்ஆகாஷ் இனி விநியோகஸ்தரும் கூட!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் ஜெய் ஆகாஷ் வினியோகஸ்தராக அவதாரம் எடுக்கும் புதிய படம் 'ஒறுத்தல்'.

செந்தில் ஜெகதீசன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்திரி நடித்திருக்கிறார். மற்றொரு கதாநாயகனாக ஜித்தேந்தர் போலீஸ் அதிகாரியாகவும், வில்லனாக பிர்லா போஸ் இவர்களோடு சுவாதி, மகேஷ், இமாசலம் ராஜீ, ஐஓபி ராமச்சந்திரன் என பலரும் நடித்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருப்பது கிருஷ்ணதாசன் ஜெகதீசன்.

Jai Akash turns as distributor

படத்தின் ஷூட்டிங் ஊட்டி, மூணாறு, திருச்சி, சென்னை உட்பட பல இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வருவதற்கு தயாராகியுள்ளது ஒறுத்தல்.

படத்தை நடிகர் ஜெய் ஆகாஷ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல வேஷம் கட்டிய ஜெய் ஆகாஷ், இதில் விநியோகஸ்தராக கால் பதிக்கிறார்.

Jai Akash turns as distributor

இது குறித்து ஜெய் ஆகாஷ் கூறுகையில், "ராமகிருஷ்ணாதான் நான் முதன் முதலில் ரிலீஸ் செய்த படம். இந்த 'ஒறுத்தல்' படக்குழு என்னைச் சந்தித்து ரிலீஸ் செய்ய உதவி கேட்டார்கள். பொதுவாகவே என்னைத் தேடி வந்து உதவி கேட்டால் என்னால் முடிந்தவரை உதவும் பழக்கம் உள்ளவன். அதன் அடிப்படையில் படத்தை பார்த்தபோது மிகவும் விறுவிறுப்பாக படம் இருந்தது. ஒரு ஆங்கில கிரைம் த்ரில்லர் படத்தை தமிழில் பார்ப்பதுபோன்ற வேகத்தோடு படம் இருந்தது. இடைவெளியே இல்லாமல் படத்தை பார்த்தேன்.

Jai Akash turns as distributor

பொதுவாகவே இதுபோன்ற த்ரில்லர் படங்களுக்கு பாடல்கள் ஸ்பீடு பிரேக் என்பார்கள். அதனால் படத்தில் பாடல்கள் இல்லை. தமிழில் ஆங்கில ப்படம் பார்க்கும் அனுபவத்தை இந்த படத்தின் மூலம் பெற்றேன். அதன் அடிப்படையில் படத்தை ரிலீஸ் செய்கிறேன்," என்றார்.

Jai Akash turns as distributor

கிருஷ்ணதாசன் ஜெகதீசன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை, ஞானஜோதி கோவிந்தராஜ் தயாரித்துள்ளார்.

English summary
Actor Jai Akash is turning as a distributor through Oruthal movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil