»   »  என்னாது, டிசம்பரில் திருப்பதியில் ஜெய், அஞ்சலி திருமணமா?

என்னாது, டிசம்பரில் திருப்பதியில் ஜெய், அஞ்சலி திருமணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஜெய் தனது காதலியான நடிகை அஞ்சலியை வரும் டிசம்பர் மாதம் திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் காதலித்து வருவதாக பலகாலமாக கூறப்படுகிறது. அவர்களிடம் கேட்டால் பதில் சொல்லாமல் நழுவிவிடுகிறார்கள்.

அஞ்சலியோ தற்போதைக்கு வேலையில் மட்டுமே கவனம் என்று அண்மையில் பேட்டி அளித்திருந்தார்.

திருமணம்

திருமணம்

திருமணம் எப்பொழுது என்று அஞ்சலியிடம் கேட்டபோது அது நடக்கும்போது நடக்கும். தற்போது என்ன அவசரம். நான் படங்களில் பிசியாக இருக்கிறேன் என்று கூலாக பதில் அளித்தார்.

திருப்பதி

திருப்பதி

ஜெய்க்கும், அஞ்சலிக்கும் வரும் டிசம்பர் மாதம் திருப்பதியில் திருமணம் நடக்க உள்ளதாக அஞ்சலியின் உறவினர்கள் கூறினர் என்று தெலுங்கு திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.

ஜெய்

ஜெய்

அஞ்சலியின் பிறந்தநாள் அன்று ஜெய் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார். நானும், கடவுளும் எப்பொழுதும் உன்னுடன் இருப்போம் அஞ்சு என்று ட்வீட்டில் தெரிவித்திருந்தார் ஜெய்.

லிவ் இன்

லிவ் இன்

காதலை ஒப்புக்கொள்ளாவிட்டாலும் ஜெய்யும், அஞ்சலியும் லிவ் இன் முறைப்படி ஒரே வீட்டில் வசிப்பதாக கூறப்படுகிறது. இதை ஜெய்யின் சில ட்வீட்டுகளே உறுதி செய்துள்ளன.

English summary
Buzz is that actor Jai and actress Anjali are getting married in December in Tirupathi. The two have been rumoured to be dating for a long time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil