twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னப்பா அப்படியே ரஜினி வாய்ஸ்ல பேசுறாரு...இவருக்குள்ள இப்படி ஒரு திறமையா?

    |

    சென்னை : ரஜினியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கும் ஃபேவரைட் நடிகர் என்றால் அது ரஜினி தான். விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுக்கு விருப்பமான நடிகர் மட்டுமின்றி முன்னுதாரணமாகவும் ரஜினி இருக்கிறார்.

    ரஜினி குரலில் பலரும் பேசி ஆடியன்சை கவர்ந்துள்ளனர். அதிலும் குறிப்பாக சமீப காலங்களில் சிவகார்த்திகேயன், ரஜினி உள்ளிட்ட பல பிரபல நடிகர்களின் குரலில் பேசி அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

    வெங்கட் பிரபு சொன்ன மங்காத்தா 2 அப்டேட்...இதை நாங்க எதிர்பார்க்கவேயில்லையே வெங்கட் பிரபு சொன்ன மங்காத்தா 2 அப்டேட்...இதை நாங்க எதிர்பார்க்கவேயில்லையே

    ஆனால் மற்ற அனைவரையும் மிஞ்சும் வகையில் நடிகர் ஒருவர் அச்சு அசலாக ரஜினி குரலில் அப்படியே, ஏற்ற இறக்கத்துடன் பேசி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த குரலை மட்டும் கேட்டால் நிஜமாகவே யாராக இருந்தாலும் ரஜினி தான் பேசுகிறார் என நினைப்பார்கள். அந்த அளவிற்கு தத்ரூபமாக பேசி உள்ளார்.

    அப்படியே ரஜினி குரல்

    அப்படியே ரஜினி குரல்

    சமீபத்தில் சென்னையில் சினிமா விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த சப்போர்டிங் ஆக்டருக்கான விருதினை ஜெய்பீம் படத்தில் ராஜாகண்ணு கேரக்டரில் நடித்த நடிகர் மணிகண்டன் பெற்றார். விருது வாங்கிய பிறகு அப்படியே ரஜினி குரலில் பேசி அசத்தினார். குட்டி ஸ்டோரி சொல்லி அப்படியே ரஜினி போலவே பேசி அசத்தினார். விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், விக்னேஷ் சிவன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மணிகண்டனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    மணிகண்டனுக்கு விருது

    மணிகண்டனுக்கு விருது

    மேலும் இந்த விருதினை பெறுவதற்கு காரணமான ஜெய்பீம் டீமுக்கு நன்றி தெரிவித்தார் மணிகண்டன். இந்த ரோலில் தான் நடிக்க டைரக்டர் ஞானவேல் தான் காரணம் என சொன்னார். இந்த கேரக்டர் தத்ரூபமாக அமைவதற்காக தனக்கு பயிற்சி அளித்த இருளர் இன மக்களுக்கும் மணிகண்டன் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து நடிகர் ஞானவேலையும் அவர் மேடைக்கு அழைத்தார்.

    ஞானவேல் பகிர்ந்த ஜெய்பீம் ரகசியம்

    ஞானவேல் பகிர்ந்த ஜெய்பீம் ரகசியம்

    மேடையில் பேசிய டைரக்டர் ஞானவேல், ஜெய்பீம் படம் பற்றி பல விஷயங்களை ஓப்பனாக பேசினார். அவர் கூறுகையில், ஜெய்பீம் கதையை எழுதி விட்டு முதலில் கதை டிஸ்கஷனுக்காக தான் மணிகண்டனை கூப்பிட்டேன். கதை பற்றி பேசிய பிறகு இதில் எந்த கேரக்டர் எல்லாம் உனக்கு பிடித்திருக்கிறது என கேட்டேன். பிறகு அதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என கேட்டேன். ஆனால் மணிகண்டன், தனது பெயரை தவிர மற்ற அனைவரின் பெயரையும் கூறினார்.

     இவர் தான் ராஜாகண்ணுக்கு சரி

    இவர் தான் ராஜாகண்ணுக்கு சரி

    கடைசியாக ராஜாகண்ணு கேரக்டரில் நீ தான் நடிக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் அடுத்த ஒரு வருடத்திற்கு வேறு எந்த படத்திலும் கமிட்டாக கூடாது என்றேன். இதற்கு ஒத்துக் கொள்ள வைப்பது தான் ஒரு டைரக்டருக்கு மிக கடினமான விஷயம். தலைமுடி முதல் அனைத்தும் இவர் தான் அந்த கேரக்டருக்கு சரி என நினைக்க வைத்தது. அதற்கு பிறகு இரண்டு மாதங்கள் இருளர் இன மக்களோடு, எந்த வசதியும் இல்லாமல் அங்கேயே தங்கியிருந்து பயிற்சி எடுத்தார் என்றார்.

    யார் இந்த மணிகண்டன்

    யார் இந்த மணிகண்டன்

    ஜெய்பீம் படத்தின் மூலம் ராஜாகண்ணாக பிரபலமான மணிகண்டன், சினிமாவிற்கு புதியவர் இல்லை. திரைப்பட எழுத்தாளர், நடிகர், டைரக்டர் என பல முகங்களைக் கொண்டவர். பிசா 2 படத்தில் எழுத்தாளராக சினிமாவிற்கு அறிமுகமான மணிகண்டன், இந்தியா பாகிஸ்தான் படத்தின் மூலம் நடிக்கரானார். நரை எழுதும் சுயசரிதம் படத்தின் மூலம் சமீபத்தில் டைரக்டராக அறிமுகமாகி உள்ளார். விக்ரம் வேதா, காலா, சில்லு கருப்பட்டி, பாவக்க தைகள், நெற்றிக்கண் போன்ற பல பிரபலமான படங்களில் நடித்திருந்தாலும். ஜெய்பீம் படம் மணிகண்டனை அனைவருக்கும் தெரிய வைத்தது.

    English summary
    In recent award function Jai bhim actor Manikandan receives best supporting actor for the film Jai Bhim. He mimics Rajinikanth voice and entertine the audience. Manikandan and director Gyanavel also shared some interesting things about jai bhim movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X