twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாட்டுக்கறி உணவு தீண்டத்தகாததா?... ‘பறை‘ விழாவில் ஞானவேல் அதிரடி பேச்சு !

    |

    சென்னை : இயக்குநர் குமரன், பறை என்ற தலைப்பில் ஓர் இசை தொகுப்பை உருவாக்கி வருகிறார். பறை இசை மூலம் சமுதாயத்தில் பெரும்பாலானோரால் உதாசீசப்படுத்தப்பட்டு கவனிக்கப்படாத ஒரு விஷயதாக மாறி உள்ளதை, பறை பாடலின் மூலம் உணர்ச்சி பொங்க காட்சிப்படத்தியுள்ளார்.

    ஷான் ரோல்டன் இசையில் பறை பாடல் இன்று வெளியாகி அனைவரிடத்திலும் பாராட்டை பெற்று வருகிறது.

    பறை இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல், பறை பாடலை பார்க்கும் போது என்னால் பாராட்ட முடியவில்லை இந்த மாதிரியான சமூகத்தில் நாம் இருக்கிறோமா என்நு நினைக்கத் தோன்றுகிறது என்றார்.

    அரபி குத்து பாடலில் விஜய்யின் நடனம் குறித்து வலிமை வில்லன் என்ன சொன்னார் தெரியுமா !அரபி குத்து பாடலில் விஜய்யின் நடனம் குறித்து வலிமை வில்லன் என்ன சொன்னார் தெரியுமா !

    தீண்டத்தகாத இசை

    தீண்டத்தகாத இசை

    பறை என்றாலே சொல்லுதல் பறைசாற்று என்று அர்த்தம், ஆனால், இன்றோ பறை குறித்து உரக்க சொல்லவேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். பறை சொல்லலே இன்று அரசியலாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை எப்படி நாம் தீண்டாமல் வைத்து இருக்கிறோமோ அதே போல இன்று பறை இசை தீண்டத்தகாத இசையாக மாறிவிட்டது.

    சுதந்திரத்திற்காக போராடுகிறோம்

    சுதந்திரத்திற்காக போராடுகிறோம்

    இந்த பறை பாடலை பார்க்கும் போது அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடந்த உரையாடலில், கோவிலுக்கு சுதந்திரம் வேண்டும், குளத்திற்கு சுதந்திரம் வேண்டும், சாலைகளுக்கும், சுடுகாட்டுகளுக்கும் விடுதலை வேண்டும் என்று போராடச் சொல்லுகிறீர்கள். ஆனால், எம் மக்களுக்கு இவற்றில் எவற்றும் செல்ல அனுமதி இல்லை. பின் ஏன் சுதந்திரத்திற்காக நாங்ள் போராடவேண்டும் என்று அம்பேத்கர் காந்தியை பார்த்து கேட்டுள்ளார். சுதந்திரம் கிடைத்து விட்டாலும் இன்னும் நாம் அந்த சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

    மாட்டு இறைச்சியில் தீண்டாமை

    மாட்டு இறைச்சியில் தீண்டாமை

    சமையாளுக்காக எத்தனை யூடியூப் சேனல்கள் உள்ளன. ஆனால், ஒரு சேனலிலாவது மாட்டு இறைச்சி சமைக்கும் வீடியோவை பதிவிடுகிறார்களா என்றால் இல்லை. மாட்டுக்கறி உணவு தீண்டத்தகாததா? நாம் உண்ணும் உணவிலே தீண்டாமையை கொண்டுவந்து, நாம் எதை சாப்பிட வேண்டும் என்பதை அவர்களே மூடிவு செய்கிறார்கள்.

    வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள்

    கலை ஒரு பொழுதுபோக்கிற்கான இடமில்லை, எந்த கலை உங்களை சிந்திக்க வைக்கிறதோ அது தான் உண்மையான கலை. இந்த சமூகத்தின் மீது எனக்கும் உங்களுக்கும் உள்ள அக்கறை இந்த பாடல் நினைவூட்டு கிறது. தனிப்பாடல் மூலம் இதுபோன்ற பல பாடல்களை வர வேண்டும். பறை இசைக்கு என வாழ்த்துக்கள் என்று இயக்குநர் ஞானவேல் பேசினார்.

    English summary
    Jai Bhim Director Gnanavel Emotional speech about parai music
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X