»   »  நிறைய லவ்... சின்ன ஆக்‌ஷன்... அந்த ஆக்ஷனும் அன்புக்காக!

நிறைய லவ்... சின்ன ஆக்‌ஷன்... அந்த ஆக்ஷனும் அன்புக்காக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்கேயும், எப்போதும் படப்புகழ் சரவணனின் அடுத்த படமான வலியவன், காதல் கலந்த ஆக்‌ஷன் கதையாம்.

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களுக்குப் பிறகு இயக்குனர் சரவணன் எடுத்து வரும் படம், வலியவன். இப்படத்தில் ஜெய், ஆண்ட்ரியா ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் இரண்டு பாடல்களும், கிளைமாக்ஸும் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது.

அதிலும், குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முருகதாஸும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படம் 2015 காதலர் தினத்தன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெய்யின் கதாபாத்திரம்...

ஜெய்யின் கதாபாத்திரம்...

இப்படத்தில் ஜெய், மால் ஒன்றில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்வாகவும், ஆண்ட்ரியா பேங்கில் வேலை பார்ப்பவராகவும் நடித்துள்ளனராம்.

காதலன் தான் வலியவன்...

காதலன் தான் வலியவன்...

வலியவன் குறித்து சரவணன் கூறுகையில், ‘இதில் காதலன் தான் வலியவன். நிறைய லவ், சின்ன ஆக்‌ஷன். அந்த ஆக்‌ஷனே அன்புக்காகத் தான்.

எமோஷனல் போர்ஷன்...

எமோஷனல் போர்ஷன்...

காதல் ஆக்‌ஷனை மீறி இதுல இன்னொரு விஷயத்தையும் உயர்த்திப் பிடிச்சிருக்கோம். அது தான் கதையோட எமோஷனல் போர்ஷன்.

ஹைலைட்...

ஹைலைட்...

அதைப் பார்க்கும் போது, ‘இந்த மாதிரி விஷயம் தானே இன்னைக்கு மனுஷனோட வாழ்க்கையை மாத்திடுது'னு உங்களுக்குத் தோணும். அதுதான் படத்தோட ஹைலைட்.

கதையோடு கனெக்ட்...

கதையோடு கனெக்ட்...

படம் பார்க்குறவங்கள்ல 90 சதவீதம் பேர், ‘ஆமாம்ல... நமக்கும் இப்படி ஒண்ணு நடந்துச்சுல்ல'னு கதையோட அவங்களைக் கனெக்ட் பண்ண வைப்பான் வலியவன்' எனத் தெரிவித்துள்ளார்.

சமூக அக்கறைக் கருத்துக்கள்...

சமூக அக்கறைக் கருத்துக்கள்...

வழக்கமாக சரவணன் படங்களில் இடம் பிடிக்கும் சமூக அக்கறை கொண்ட விஷயங்கள் இப்படத்திலும் உள்ளது என படக்குழுவினர் கூறுகின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்புகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

80 நாள் வேலை

80 நாள் வேலை

இந்தப் படத்தை 80- நாட்களில் முடிக்க திட்டமிட்டனராம். இதில் 65 நாள் வேலை முடிந்து விட்டதாம். இன்னும் 15 நாள் வேலை பாக்கி இருக்காம்.

இந்தியாவுக்குள்ளேயே பாடல்கள்...

இந்தியாவுக்குள்ளேயே பாடல்கள்...

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் இந்தியாவுக்குள்ளேயே எடுக்க திட்டமிட்டுள்ளனராம்.

English summary
There's news on director Saravanan's next film Valiyavan featuring Jai and Andrea in the lead. Sources close to the unit of the film say that Jai plays a marketing executive in a mall in the film and Andrea plays a banker in the film.
Please Wait while comments are loading...