Just In
- 4 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 4 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 5 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 5 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜெய்க்கு ‘புகழ்’ ஜாஸ்தியாகுதே?
ஜெய் நடிக்கும் புதிய படத்திற்கு புகழ் என்று பெயரிட்டுள்ளனர். ‘உதயம் என்.ஹெச்.4 ‘பொறியாளன்' ஆகிய படங்களை இயக்கிய மணிமாறன் அடுத்து ஜெய்யை வைத்து இந்த புதிய படத்தை இயக்குகிறார். இவன் வேறமாதிரி படத்தின் நாயகி சுரபி இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
ரேடியன்ஸ் மீடியா மற்றும் பிலிம் டிபார்ட்மெண்ட் தயாரிக்கும் புகழ் படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இளையதளபதி விஜய் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் படமெடுப்பதற்காக பதிவு செய்திருந்த டைட்டில்தான் 'புகழ்'. ஆனால் அதன்பின்னர் சில காரணங்களால் விஜய் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அந்த டைட்டிலை புதுப்பிக்க மறந்துவிட்டார். எனவே அந்த டைட்டிலை தற்போது இயக்குனர் மணிமாறன் தனது அடுத்த படத்திற்காக கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஜெய் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘புகழ்'. இந்த படத்தைப் பற்றி கூறிய தயாரிப்பாளர் சுஷாந்த் போது,‘ நம் வாழ்வில் நாம் எப்போதும் அறிந்தோ, அறியாமலோ ஜெயிக்க வாய்ப்பில்லை என கருதபடுபவர் ஜெயிக்க வேண்டும் என ஆசை படுவதுண்டு.
அவர்களின் வெற்றியில் நாம் நம்மை காண விழைவது உண்டு.'புகழ்' நாம் வாழ்வில்நாம் சந்திக்கும் அத்தகைய ஒரு நபரை பற்றிய கதை. கதாநாயகன் ஜெய் மற்றும் மற்றும் இயக்குனர் மணிமாறன் அந்த உணர்வுகளை பிரமாதமாகவெளிப்படுத்தி உள்ளார்கள் என்றார்.
கதாநாயகிக்கான தேர்வு நடை பெரும் போது பல்வேறு பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. ஆனால் இறுதியில் அந்த பாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் ‘இவன் வேற மாதிரி' படத்தில் நடித்த சுரபிதான் அவர் அந்த பாத்திரத்துக்கு மிக சரியான தேர்வு என கண்டுபிடித்தோம் என்றார்.
‘இது ஒரு ஆக்சன் திரில்லர் படம் என்கிறார் இயக்குனர் மணிமாறன். புகழ் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது. வெற்றி வேண்டும் என முனைப்போடு செயல்படுகிறோம் என்று கூறியுள்ளார் மணிமாறன்.
பிலிம் டிபார்ட்மென்ட் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜ் தயாரிக்கும் இந்த படத்தை ரேடியன்ஸ் மீடியா சார்பில் வெளியிடவிருப்பவர் தயாரிப்பாளர் வருண் மணியன்.
புகழ் படத்தின் கதாநாயகி தேர்வில் முதலில் இருந்தவர் திரிஷாவாம். தன் மனம் கவர்ந்த மங்கை தன் தயாரிப்பிலேயே நடிப்பதா என்று கடைசி நிமிடத்தில் கலங்கிய வருங்கால மணாளன் வருண் மணியன் சட்டென்று கதாநாயகியை மாற்றிவிட்டதாக கோடம்பாக்கம் முழுவதும் இப்போது பேச்சு அடிபடுகிறது.
சராசரியான வாலிபன் மற்றும் அப்பாவியான கதாபாத்திரங்களில் சோபிக்கும் ஜெய் சமீபமாக அதிரடி ஆக்க்ஷன் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். புகழ் படமும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.
ஜெய் தற்போது அர்ஜூனன் காதலி, தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும், வலியவன் போன்ற படங்களில் நடித்துவருகிறார். இதில் அர்ஜூனன் காதலி படம் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.