»   »  அஞ்சு, ஜெ...: ட்விட்டரில் ஜெய், அஞ்சலி கொஞ்சல்ஸ்

அஞ்சு, ஜெ...: ட்விட்டரில் ஜெய், அஞ்சலி கொஞ்சல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஞ்சலியின் பிறந்தநாளையொட்டி நடிகர் ஜெய் ட்விட்டரில் காதல் பொங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் காதலிப்பதாகவும், இருவரும் லிவ் இன் முறைப்படி ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் பேசப்படுகிறது. ஒரு முறை அஞ்சலிக்கு தோசை சுட்டுக் கொடுத்து அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டு லிவ் இன் முறை வாழ்க்கையை கிட்டத்தட்ட உறுதி செய்தார் ஜெய்.

இந்நிலையில் அஞ்சலியின் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜெய்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

அஞ்சலி இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஆயிரம் பேர் வாழ்த்து தெரிவித்தாலும் காதலர் ஜெய் ஸ்பெஷலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர்

எனக்கு நீ எப்படி ஸ்பஷெலோ அதே போன்று இந்த நாள் உனக்கு அமையட்டும். நீ நீயாக இருந்து என் ஒவ்வொரு நாளையும் ஸ்பெஷலாக்குகிறாய் என்பதை உனக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நானும், கடவுளும் என்றுமே உன்னுடன் இருப்போம். ஹேப்பி பர்த்டே அஞ்சு என்று ட்வீட்டியுள்ளார் ஜெய்.

அஞ்சலி

ஜெய்யின் ட்வீட்டை பார்த்த அஞ்சலி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். என்னுடன் இருப்பதற்கு நன்றி ஜெ., என் ஸ்பெஷல் நாளில் இந்த ஸ்பெஷல் வாழ்த்துக்கு நன்றி என்று ட்வீட்டியுள்ளார்.

காதல்

காதல்

காதல் பற்றி கேட்டால் ஜெய்யும், அஞ்சலியும் நழுவி வந்த நிலையில் அவர்களின் ட்வீட்டுகள் மூலம் காதல் உறுதியாகியுள்ளது. நல்லா இருங்கய்யா என்று ரசிகர்கள் வாழ்த்துகிறார்கள்.

English summary
Jai has tweeted that, 'May your big day be as special as you are to me. On your special day, I'd like to let you know that you make every single day of my life really special just by being yourself. God and Me will always be with you!! Happy birthday Anju!!!'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil