»   »  நானும் அஞ்சலியும்.. மீண்டும்.. மனம் திறந்த ஜெய்!

நானும் அஞ்சலியும்.. மீண்டும்.. மனம் திறந்த ஜெய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் எந்தத் தவறும் இல்லை என்று நடிகர் ஜெய் கூறியிருக்கிறார்.

ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் புகழ் திரைப்படம் வருகின்ற 18ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் ஜெய் அளித்த பேட்டி ஒன்றில் தனது படம் மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்து அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

புகழ்

புகழ்

"எனது நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் புகழ் படத்தில் அரசியல்வாதியை எதிர்க்கும் இளைஞனாக நான் நடித்திருக்கிறேன். எனக்கும் அந்த அரசியல்வாதிக்கும் இடையே உள்ள பிரச்சினையும், அது எப்படி தீர்க்கப்படுகிறது என்பதும் தான் படத்தின் கதை.

அஞ்சலி

அஞ்சலி

'எங்கேயும் எப்போதும்' படத்தில் சேர்ந்து நடித்த போது எனக்கும் அஞ்சலிக்கும் நல்லதொரு புரிதல் இருந்தது. இடையில் சில காரணங்களால் எனக்கும் அஞ்சலிக்கும் இடைவெளி விழுந்தது. 5 மாதங்களுக்கு முன்பு நானும், அவரும் மீண்டும் சந்தித்து மொபைல் எண்களை மாற்றிக் கொண்டோம். எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது, இது காதலாக மாறினாலும் ஆச்சரியமில்லை.

திருமணத்தில் நம்பிக்கை

திருமணத்தில் நம்பிக்கை

இன்று பெரும்பாலான திருமணங்கள் விவகாரத்தில் தான் முடிகின்றன. இதனால் திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. காதலர்கள் ஒருவரைப் பற்றி மற்றொருவர் நன்றாக புரிந்து கொண்டால், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதில் தப்பில்லை.

நயன்தாரா

நயன்தாரா

சினிமாவில் அஞ்சலி தவிர நயன்தாரா எனக்கு நல்ல தோழியாக இருக்கிறார். நான் சோகமாக மற்றும் குழப்பமாக இருக்கும் நேரங்களில் அவர் எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்" இவ்வாறு ஜெய் தெரிவித்திருக்கிறார்.

English summary
"We are Very Good Friends. This Friendship turns into Love, it is not Surprising" Jai Talks about Anjali in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil