»   »  நடிகர் தியாகராஜனுக்கு போலீஸ் வலைவீச்சு!

நடிகர் தியாகராஜனுக்கு போலீஸ் வலைவீச்சு!

Subscribe to Oneindia Tamil

தனிக்கை வாரியத்தால் தனிக்கை செய்யப்பட்ட காட்சிகளுடன் ஜெய் படத்தை திரையிட்டதற்காக படத்தின்தயாப்பாளரும், நடிகர் பிரஷாந்த்தின் தந்தையுமான நடிகர் தியாகராஜன் மற்றும் புதுக்கோட்டையிலிருந்துசரவணன் படத் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையிலிருந்து சரவணன் மற்றும் ஜெய் ஆகிய படங்கள் சென்னைநகரில் ரிலீஸ் ஆகின. இரு படங்களும் திரையிடப்பட்டிருந்த சந்திரன், ருக்மணி, ரக்ஷினி, காசி ஆகியதியேட்டர்களில் திடீர் சோதனை நடத்திய சென்சார் வாரிய அதிகாரிகள், சென்சார் செய்யப்பட்ட காட்சிகளுடன்படம் ஓடுவதைப் பார்த்து அதிர்ந்தனர்.

இதையடுத்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தியாகராஜன் மற்றும் கிருஷ்ணகாந்த் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், நான்கு தியேட்டர்களையும் சேர்ந்த மேலாளர்கள், ஆபரேட்டர்கள்உள்ளிட்ட 7 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

தியாகராஜன் மற்றும் கிருஷ்ணகாந்த் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள். ஜெய் படத்தில் மொத்தம் 21 காட்சிகளை நீக்குமாறு தியகாராஜனுக்கு சென்சார் அதிகாரிகள்கூறியுள்ளனர். ஆனால் வெறும் 6 காட்சிகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற காட்சிகளுடன் படத்தைரிலீஸ் செய்து விட்டதாகவும் சென்சார் வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அதேபோல, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் வரும் நாட்டுச் சரக்கு நச்சுன்னுதான் இருக்கு என்றபாடலில் பல வரிகளை நீக்குமாறு சென்சார் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் ஓரு சில வரிகளைமட்டும் நீக்கி விட்டு படத்தை ரிலீஸ் செய்துள்ளார்கள்.

இதற்கிடையே, சென்சார் வாரிய சான்றிதழ் வழங்கும் முறையில் இருக்கும் குளறுபடிகளால்தான் இந்த பிரச்சினைஎழுந்துள்ளதாக தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil