»   »  ஜெய் தியாகராஜனுக்கு முன் ஜாமீன்

ஜெய் தியாகராஜனுக்கு முன் ஜாமீன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்சார் செய்யப்பட்ட காட்சிகளுடன் ஜெய் படத்தை வெளியிட்ட வழக்கில் நடிகர் பிரஷாந்தின் தந்தையும் அந்தப் படத்தின்தயாரிப்பாளருமான தியாகராஜனுக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

அதே போல புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்துக்கும் முன் ஜாமீன் தரப்பட்டுள்ளது.இதனால் கைதாவதில் இருந்து இருவரும் தப்பியுள்ளனர்.

பொங்கல் பண்டிகையன்று வெளியிடப்பட்ட ஜெய், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் ஆகிய இரு படங்களும் சென்சார்செய்யப்பட்ட காட்சிகளுடன் வெளியாயின. இதில் ஜெய் படத்தில் ஷகீலாவின் பலான காட்சிகள் கொண்ட பகுதி சேர்க்கப்பட்டது.

சென்சார் போர்டு வெட்டிய அபர்ணாவின் மிதமிஞ்சிய மேலாடை துறவு காட்சி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில்மீண்டும் சேர்க்கப்பட்டு படம் ஓட்டப்பட்டது.

இதையடுத்து சென்சார் போர்டு அதிகாரிகள் போலீஸாரிடம் புகார் தந்தனர். இதைத் தொடர்ந்து சென்னையில் 4 தியேட்டர்களில்போலீஸார் சோதனை நடத்தி தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளுடன் ஓட்டப்பட்ட இந்த இரு படங்களின் பிலிம் ரோல்கலையும்பறிமுதல் செய்தனர்.

தியேட்டர் ஊழியர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஜெய் படத்தின் ஹீரோ பிரஷாந்தின் தந்தையும், படத்தின் தயாரிப்பாளருமான நடிகர் தியாகராஜன், தனஷ் நடித்தபுதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர்.

இதையடுத்து தங்களை கைது செய்யும் நிலை உருவாகியுள்ளதால் முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அவர்களது மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜெயபால், 2 பேருக்கும் முன் ஜாமீன் வழங்கிஉத்தரவிட்டார்.

ஜெய் யில் நுழைக்கப்பட்ட ஷகீலா

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil