2021 ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம் எது தெரியுமா... கேட்டா அசந்துடுவீங்க

சென்னை : 2021 ம் ஆண்டின் கடைசி மாதத்தில் இருக்கிறோம். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் அந்த ஆண்டில் ஒவ்வொரு துறையிலும் அதிகம் தேடப்பட்ட தலைப்புக்கள், பெயர்கள், வார்த்தைகள் உள்ளிட்டவற்றின் விபரங்களை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் இந்தியாவில் 2021 ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட சினிமாக்களின் டாப் 10 பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் படங்கள் இரண்டு மட்டுமே இடம்பெற்றுள்ளன. மற்றவை பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்கள் தான்.

அதிகம் தேடப்பட்ட படம்

அதிகம் தேடப்பட்ட படம்

2021 ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட படம் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் தான். அதிகம் தேடப்பட்ட சினிமாக்கள் பட்டியலில் ஜெய் பீம் முதல் இடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படம் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

தேடப்பட்ட டாப் 10 படங்கள்

தேடப்பட்ட டாப் 10 படங்கள்

கூகுள் வெளியிட்டுள்ள அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் ஜெய்பீம் முதலிடத்திலும், Shershaah இரண்டாவது இடத்திலும், Radhe 3வது இடத்திலும், பெல் பாட்டம் 4வது இடத்திலும், Eternals 5வது இடத்திலும், மாஸ்டர் 6வது இடத்திலும், சூர்யவன்சி 7 வது இடத்திலும், Godzilla Vs Kong 8 வது இடத்திலும், த்ரிஷ்யம் 2 9வது இடத்திலும், Bhuj : The Pride of India 10 வது இடத்திலும் உள்ளது.

ஓடிடி ரிலீஸ்

ஓடிடி ரிலீஸ்

டைரக்டர் டி.ஜே.ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்திருந்தது. இந்த படத்தில் முதல் முறையாக சூர்யா வழக்கறிஞர் ரோலில் நடித்திருந்தார். ஜெய்பீம் படம் நவம்பர் 2 ம் தேதி ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. பழங்குடியின மக்களுக்கு எதிரான அடக்குமுறையை மையமாகக் கொண்டு, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டது.

வரவேற்பை பெற்ற ஜெய்பீம்

வரவேற்பை பெற்ற ஜெய்பீம்

ஜெய்பீம் ரிலீஸ் ஆனதும் அனைத்து தரப்பினரும் இந்த படத்தை பாராட்டினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஜெய்பீம் படத்தை பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்தனர். லாரன்ஸ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்ட ராஜாகண்ணு குடும்பத்திற்கு உதவ முன் வந்தனர். பழங்குடியின மக்களின் நல வாழ்விற்காக சூர்யா சார்பில் ரூ.1 கோடி அரசிடம் நிதியாக வழங்கப்பட்டது.

அரசியல் கட்சியினர் எதிர்ப்பு

அரசியல் கட்சியினர் எதிர்ப்பு

இந்த படத்தில் ஒரு சீனில் இடம்பெற்ற ஒரு காலெண்டரால் துவங்கிய பிரச்சனை, பின் மிகப் பெரிய அரசியல் நெருக்கடிக்கடியையும் சாதி அமைப்புக்களின் கடும் எதிர்ப்பையும் இந்த படம் பெற்றது. இருந்தாலும் சூர்யாவிற்கு எதிராக அரசியல் கட்சிகளை சேர்ந்த பலரும் எதிர்ப்பு குரல் எழுப்பி வந்தனர். சூர்யாவிற்கு ஆதரவாக ரசிகர்கள், சில அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் குரல் கொடுத்தனர்.

சர்வதேச அங்கீகாரம்

சர்வதேச அங்கீகாரம்

இருப்பினும் அனைத்து எதிர்ப்புக்களையம் மீறி ஜெய்பீம் படம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றது. IMDb பட்டியலில் ஜெய்பீம் படம் அதிக ரேட்டிங்குகளை பெற்று முதல் இடம் பிடித்தது. இதற்கு முன் கடந்த ஆண்டு ஓடிடி.,யில் ரிலீசான சூர்யாவின் சூரரைப் போற்று படம் IMDb பட்டியலில் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X