ரஜினி இல்லாமல் துவங்கியதா ஜெயிலர் ஷுட்டிங்...தீயாய் பரவும் தகவலை கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை : ரஜினி அடுத்ததாக நடிக்க உள்ள ஜெயிலர் பட ஷுட்டிங் எப்போது துவங்கப்பட உள்ளது என்பது தான் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

Recommended Video

Jailer | அப்போ Rajinikanth Delhi-க்கு எதுக்கு போனார்? ஏகப்பட்ட மாற்றங்கள் *Kollywood

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

படத்தின் அறிவிப்பை பிப்ரவரி மாதம் வெளியிட்ட சன் பிக்சர்ஸ், சமீபத்தில் தான் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்குடன் டைட்டில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக பல தகவல்கள் வெளியாகின.

குழப்பத்தில் ரசிகர்கள்

குழப்பத்தில் ரசிகர்கள்

ஆனால் ஜெயிலர் படத்தின் ஷுட்டிங் எப்போது துவங்கப்பட உள்ளது. இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது பற்றி எந்த உறுதியான தகவலும் வெளியிடப்படவில்லை. ஜெயிலர் படத்தின் கதை உள்ளிட்ட பல தகவல்களும் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வந்தன.ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் பல விமர்சனங்களை சந்தித்தது.

ரஜினியின் திடீர் டில்லி பயணம்

ரஜினியின் திடீர் டில்லி பயணம்

இதற்கிடையில் சமீபத்தில் ரஜினி திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். இதனால் அவர் ஜெயிலர் பட ஷுட்டிங்கிற்காக தான் சென்றுள்ளார் என தகவல் பரவியது. ஆனால் அடுத்த நாளே ரஜினி திரும்பி வந்ததால், அப்போ ஷுட்டிங்கிற்காக இவர் டில்லி போகவில்லையா, எதற்காக டில்லி போனார், எப்போ ஜெயிலர் ஷுட்டிங் என அடுத்தடுத்த கேள்விகள் எழுந்தன.

அடுத்தது ஜெயிலர் தான்

அடுத்தது ஜெயிலர் தான்

டில்லியில் இருந்து திரும்பி வந்த ரஜினியிடம் ஜெயிலர் படம் பற்றி கேட்டதற்கு, அடுத்தது அது தான் என்றார். ரஜினியே சொல்லி விட்டதால் விரைவில் ஜெயிலர் ஷுட்டிங் விரைவில் துவங்கப்படும் என ரசிகர்கள் செம குஷியாகினர். இதற்கிடையில் ஆகஸ்ட் 15 அல்லது ஆகஸ்ட் 22 ம் தேதி ஜெயிலர் பட ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாகவும், ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம்சிட்டியில் தான் ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாக தகவல் பரவியது.

ஹாட் அப்டேட் தந்த நடிகை

ஹாட் அப்டேட் தந்த நடிகை

ஆனால் நேற்று மீடியா ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகை ரம்யா கிருஷ்ணன், தான் அடுத்ததாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிப்பதை கன்ஃபார்ம் செய்ததுடன், ரஜினியுடன் நான் நடிக்கும் ஜெயிலர் பட ஷுட்டிங் இன்று (ஆகஸ்ட் 10) துவங்கப்பட உள்ளது. மிக உற்சாகமாக காத்திருக்கிறேன் என்றார்.

விதவிதமாக பரவிய தகவல்

விதவிதமாக பரவிய தகவல்

படையப்பா படத்திற்கு பிறகு ரஜினி -ரம்யா கிருஷ்ணன் காம்போ மீண்டும் இணைய உள்ளது. ஆனால் மற்றொரு தகவலின் படி, முழு வீச்சில் ஷுட்டிங் ஆகஸ்ட் 15 ம் தேதி தான் துவங்கப்பட உள்ளதாகவும், ஆகஸ்ட் 10 ம் தேதியான நாளை படத்தின் டெஸ்ட் ஷுட் தான் நடத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட உள்ள ஜெயிலர் படத்தின் கதை வித்தியாசமாக, தனித்துவமாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜெயிலர் ஷுட்டிங் ஆரம்பிச்சுட்டாங்களா?

ஜெயிலர் ஷுட்டிங் ஆரம்பிச்சுட்டாங்களா?

இந்த சமயத்தில் சென்னையில் இன்று ஜெயிலர் படத்தின் ஷுட்டிங் துவங்கி உள்ளதாகவும், ஆனால் இதில் ரஜினி கலந்து கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய முதல் நாள் ஷுட்டிங்கில் ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லே, வசந்த் ரவி ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் ரஜினி, ஜெயிலர் ஷுட்டிங்கில் கலந்து கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் இந்த தகவலை ரசிகர்கள் பண்டிகை போல கொண்டாடி வருகின்றனர். இந்த தகவலால் ட்விட்டரில் #Jalier ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X