»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

குவைத்தில் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை சென்னை கொண்டு வரப்பட்டு, அப்பல்லோமருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

நடிகர் ஜெய்சங்கருக்கு, குவைத்திலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் இணைந்து கடந்த மாதம் பாராட்டு விழா நடத்தின. இதில் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.அப்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் விமான பயணத்திற்கு அவர் உடல் ஏற்ற நிலையில் இருந்ததால், ஞாயிற்றுக்கிழமை ஜெய்சங்கர், சென்னை அழைத்து வரப்பட்டார்.தற்போது அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெய்சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Read more about: actor, chennai, jaishankar, kuwait, tamil nadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil