»   »  ஜல்லிக்கட்டு: பீட்டாவுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே- குஷ்பு பொளேர்

ஜல்லிக்கட்டு: பீட்டாவுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே- குஷ்பு பொளேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை குஷ்பு போட்டுள்ள ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. ஜல்லிக்கட்டு மீதான தடை நீடிப்பதால் இந்த ஆண்டும் அதை நடத்த முடியாத நிலை.

Jallikattu: Here is what Khusbu tweets

இந்நிலையில் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்கக் கோரி மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

வெளிநாடு வாழ் தமிழர்களும் அவரவர் இடங்களில் அமைதிப் பேரணி நடத்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மடகாஸ்கர் நாட்டு ரூபாய் நோட்டில் ஜல்லிக்கட்டு புகைப்படம் உள்ளது. பீட்டா மற்றும் பிற ஆர்வலர்களுக்கு இது கண்ணுக்கு தெரியவில்லை..#SupportJallikattu என தெரிவித்துள்ளார்.

English summary
Actress cum politician Khushbu tweeted that, 'currency of Madagascar hs #Jallikattu as their symbol..PETA n all other activists r blind 2 this..#SupportJallikattu'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil