»   »  பெருமையாக இருக்கு, வாவ்: ஜல்லிக்கட்டு புரட்சியை பாராட்டிய நடிகர் மகேஷ் பாபு

பெருமையாக இருக்கு, வாவ்: ஜல்லிக்கட்டு புரட்சியை பாராட்டிய நடிகர் மகேஷ் பாபு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் அமைதிப் புரட்சி நடந்து வருகிறது. இளைஞர்களின் அறவழிப் போராட்டம் நாட்டு மக்களை நெகிழச் செய்துள்ளது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ட்வீட் போட்டுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு

தமிழகத்தின் உத்வேகம் ஜல்லிக்கட்டு- துணிச்சல் மற்றும் பயம் இல்லாதது என மகேஷ்பாபு ட்வீட்டியுள்ளார்.

பெருமை

தாங்கள் முழுமனதாக நம்பும் விஷயத்திற்காக தமிழர்கள் ஒன்றுபட்டுள்ளதை பார்க்கவே பெருமையாக இருக்கிறது.

மாணவர்கள்

கலாச்சாரத்தை காக்க தமிழக மாணவர்கள் போராடும் விதம் மகேஷ் பாபுவை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஜல்லிக்கட்டு

புரட்சியாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று நம்புவதாகவும், தமிழகத்தின் உத்வேகத்தை ஆதரிப்பதாகவும் மகேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

English summary
Telugu actor Mahesh Babu who speaks Tamil fluently has showed his support for Jallikattu on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil