»   »  மெரினா பெண் புரட்சியாளர்களுக்காக டாய்லெட்டுடன் கூடிய கேரவன்களை அனுப்பிய ராகவா லாரன்ஸ்

மெரினா பெண் புரட்சியாளர்களுக்காக டாய்லெட்டுடன் கூடிய கேரவன்களை அனுப்பிய ராகவா லாரன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக மெரினா கடற்கரையில் போராடி வரும் பெண்களுக்காக கழிவறையுடன் கூடிய 5 கேரவன்களை அனுப்பி வைத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள், மாணவ-மாணவிகள் தொடர் புரட்சி செய்து வருகிறார்கள். இரவும், பகலும் மெரினாவில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு நடக்கும் வரை ஓயப் போவது இல்லை என தெரிவித்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

மெரினா கடற்கரைக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ் புரட்சியாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார். மேலும் புரட்சியாளர்களின் உணவு, மருந்து செலவுக்காக ரூ. 1 கோடி அளிப்பதாக அறிவித்தார்.

பெண்கள்

பெண்கள்

மெரினாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் கழிப்பறை வசதி இல்லாமல் கஷ்டப்படுவதை ராகவா லாரன்ஸ் உணர்ந்தார். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.

கேரவன்கள்

கேரவன்கள்

கழிவறைகளுடன் கூடிய 5 கேரவன்களை ராகவா லாரன்ஸ் இன்று காலை மெரினா கடற்கரைக்கு அனுப்பி வைத்தார். கேரவன்களுடன் சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் அங்கு வந்து அவற்றை ராகவா லாரன்ஸ் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.

நடிகைகள்

நடிகைகள்

மெரினா கடற்கைரைக்கு வந்தபோது பெண்கள் படும் பாட்டை பார்த்த ராகவா லாரன்ஸ் சிவலிங்கா படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த 5 கேரவன்களை அனுப்பி வைத்துள்ளார் என்று தயாரிப்பாளர் தெரிவித்தார். தக்க சமயத்தில் உதவி செய்த ராகவா லாரன்ஸை புரட்சியாளர்களுடன் சேர்ந்து நாமும் பாராட்டுவோம்.

English summary
Actor Raghava Lawrence has sent 5 caravans to Marina beach for the sake of women protestors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil