»   »  ஜல்லிக்கட்டு, பாரம்பரியம்; பெண்மை போற்றுதல் நம் பண்பாடு: த்ரிஷாவுக்கு விவேக் ஆதரவு

ஜல்லிக்கட்டு, பாரம்பரியம்; பெண்மை போற்றுதல் நம் பண்பாடு: த்ரிஷாவுக்கு விவேக் ஆதரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பாக நடிகை த்ரிஷாவை பலரும் விமர்சித்துள்ள நேரத்தில் நடிகர் விவேக் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பின் ஆதரவாளரான நடிகை த்ரிஷாவுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் த்ரிஷாவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.

Jallikattu row: Vivekh supports Trisha

இதை பார்த்த த்ரிஷா கோபம் அடைந்து ட்வீட்டினார். மேலும் தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதே இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அவர் ட்விட்டரை விட்டே வெளியேறினார். த்ரிஷா பீட்டா ஆதரவாளர் இல்லை என அவரது தாய் உமா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் விவேக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

த்ரிஷா தன்நிலை தெளிவு படுத்திவிட்டார். ஏறுதழுவலும் நடந்து விட்டது. ஜல்லிக்கட்டு, பாரம்பரியம்; பெண்மை போற்றுதல் நம் பண்பாடு. கண்ணியம் காப்போம்.

முன்னதாக உலக நாயகன் கமல் ஹாஸனும் த்ரிஷாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Vivekh has supported actress Trisha who is trolled hard for being a supporter of PETA that is against Jallikattu.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil