»   »  விஜய் முதல் வைஸ் கேப்டன் வரை யாரையும் விட்டு வைக்காத ஜல்லிக்கட்டு ட்ரெண்ட்!

விஜய் முதல் வைஸ் கேப்டன் வரை யாரையும் விட்டு வைக்காத ஜல்லிக்கட்டு ட்ரெண்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜல்லிக்கட்டுக்காக தமிழக இளைஞர்களே கொதித்தெழுந்து உலகமே அதிரும் வண்ணம் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்டார்கள். ஜல்லிக்கட்டு என்று சொன்னாலே விசில் வரும் என்று தெரிந்துகொண்ட சினிமாக்காரர்கள் சும்மா இருப்பார்களா?

இப்போது தயாராகும் படங்களில் பெரும்பாலான படங்கள் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகி வருகின்றன.

Jallikkattu is the trend in Tamil Cinema

விஜய் நடிக்க அட்லீ இயக்கும் மெர்சல் படத்தில் அப்பா விஜய் காளையை அடக்குவது போல ஒரு ஓப்பனிங் ஸீன் வைத்திருக்கிறார்கள்.

விஜய்சேதுபதி நடிக்கும் கருப்பன், ஆர்யா நடிக்கும் சந்தனதேவன் ஆகியவை ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு உருவாகின்றன.

இந்த வரிசையில் கேப்டன் விஜயகாந்த் மகன் நடிக்கும் சண்முகபாண்டியனும் மதுர வீரன் படத்தில் காளையை அடக்குகிறாராம்.

இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் போகும்...

English summary
The trend in Tamil film industry is making movies on jallikkattu and related issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil