»   »  பைரவா வசூலைப் பதம் பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டம்!

பைரவா வசூலைப் பதம் பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எந்த ராஜா எந்தப் பட்டணம் போனா என்ன... சினிமா வசூல் அது பாட்டுக்கு வந்துரும் என்பதுதான் சில ஆண்டுகள் வரை நிலைமை.

ஆனால் இன்று அப்படியே தலைகீழாகிவிட்டது. தமிழகத்தில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், சினிமாவை தூக்கிப் போட்டுவிட்டு மக்கள் ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள். அட, சினிமாக்காரர்களே ஓடி வந்துவிடுகிறார்களே...


Jallikkattu protests pull down Bairava collection

கடந்த ஒரு வார காலமாக நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம், இந்த பொங்கலுக்கு வெளியான விஜய்யின் பைரவா படத்தைப் பதம் பார்த்துவிட்டது.


கிட்டத்தட்ட 55 நாடுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டதாக கூறப்பட்ட விஜய்யின் பைரவா படம், முதல் நாளில் ரூ.16 கோடியைத் தொட்டதாகக் கூறப்பட்டது.


ஆனால் படம் வெளியான 5 வது நாளே ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் உச்சத்தைத் தொட்டன. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பைரவா வசூல் பாதிக்கப்பட்டது.


இரண்டாவது வாரத்தில் மொத்தம் ரூ 55 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் படம் முதல் வாரமே 100 கோடியை அள்ளியதாக விநியோகஸ்தர் தரப்பில் விளம்பரம் தரப்பட்டது நினைவிருக்கலாம்.

English summary
According to box office sources, Vijay's Bairava collection has dropped heavily due to Jallikkattu protests.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil