For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Jam with Josh: முதல் முறையாக இசை நிகழ்ச்சியை நடத்தும் ஜோஷ் ஆப்.. 5 ஜோஷ் பிரபலங்கள் பங்கேற்பு!

  |

  சென்னை: "இந்தியாவின் மிகப்பெரிய ஷார்ட் வீடியோ செயலியான ஜோஷ் (Josh) ஆப், தனது வித்தியாசமான கன்டென்ட்கள் மூலம் வீடியோ உலகில் புதிய உயரம் தொட்டு இருக்கிறது. கடந்த 2020ம் வருடம்தான் இந்த செயலி தொடங்கப்பட்டு இருந்தாலும் ஏற்கனவே இது டாப் ஷார்ட் வீடியோ செயலியாக உருவெடுத்துவிட்டது. அதேபோல் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த மேடை அமைத்து கொடுப்பதிலும் ஜோஷ் (Josh) செயலிதான் நம்பர் ஒன் என்ற இடத்தை பிடித்திருக்கிறது.

  இந்நிலையில், முதல் முறையாக விர்ச்சுவல் இசை நிகழ்ச்சியை ஜோஷ் ஆப் வரும் ஜூலை 29ம் தேதி நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற உள்ள இந்த இசைக் கச்சேரியில் ஜோஷ் ஆப்பை சேர்ந்த 5 இசை கலைஞர்கள் இசை மழையை பொழிய போகின்றனர்.

  இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள 5 போட்டியாளர்களும் வெவ்வேறு மொழியை சார்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல். பல மொழிகளின் இசை சங்கமமாக இந்த ஜாம் வித் ஜோஷ் இசைக் கச்சேரி நிகழ்ச்சி நாளை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

  ஹனி பிளேஸ்

  ஹனி பிளேஸ்

  பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட ஹனி பிளேஸ் இந்த கச்சேரியில் கலந்து கொள்கிறார். 3 வயது முதலே இசை பயின்று வரும் இவர், ஜோஷ் செயலியில் டாப் ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வருகிறார். தனியாகவும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  https://share.myjosh.in/profile/42ef3b55-7258-44ad-ae2a-4d9e1737ae99

  ஸ்னிக்தாஜித் பவ்மிக்

  ஸ்னிக்தாஜித் பவ்மிக்

  வங்காளத்தின் ராய்கன்ஜ் பகுதியை சேர்ந்த 31 வயது பாடகர் ஸ்னிக்தாஜித் பவ்மிக்கும் இந்த இசைக் கச்சேரியில் கலந்து கொள்கிறார். நாட்டுப்புற பாடல்கள், ஜாஸ், ஃபியூஷன் என அனைத்து விதமான இசைப் பாடல்களையும் பாடி அசத்தும் திறமைக் கொண்டவர் இவர். 2015ல் நடைபெற்ற தி வாய்ஸ் இன் இந்தியா நிகழ்ச்சியின் மூலம் பாடகராக அறிமுகமானார். 2018ல் ஜீ டிவியில் நடத்தப்பட்ட சரிகமப நிகழ்ச்சியின் முதல் ரன்னர் அப் ஆக அசத்தியவர் இவர்.

  https://share.myjosh.in/profile/2752eb9c-e673-45fa-9c45-d2d1122a7a04?u=0x09f35c3d0d9c35db

  கீர்த்தனா ஸ்மிதா ஷாஜி

  கீர்த்தனா ஸ்மிதா ஷாஜி

  இந்துஸ்தானி மேஸ்ட்ரோ உஸ்தாத் ஃபயாஸ் கானின் மாணவியான இவர் சூப்பர் 4 சீசன் 2 நிகழ்ச்சியின் செமி ஃபைனலிஸ்ட்டாக கெத்துக் காட்டினார். இன்ஜினியரிங்கை விட்டு விட்டு இசைப் பக்கம் தனது பயணத்தை திருப்பிய இவர், பிரபல இசைக் கலைஞராக வலம் வருகிறார்.

  https://share.myjosh.in/profile/8d3ec3ee-5c54-4156-a1b6-547c2dac83d6?u=0x1e744697afdcc714

  வீரஜ் கன்னடிகா

  வீரஜ் கன்னடிகா

  ஃபேமிலி பேக், ஆம்லேட் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் வீரஜ் கன்னடிகாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். யூடியூபில் இவரது பாடல்களான ஃபுல் ஃபீலிங்ஸ், லோக்கல் பாய்ஸ் பார்ட்டி, ஜூஸ் குடுத்தியா பாடல்கள் பல மில்லியன் வியூக்களை அள்ளி உள்ளன.

  https://share.myjosh.in/profile/1c7656cd-9949-48e6-991b-29dfacba308c

  தீப் சந்தல்

  தீப் சந்தல்

  பஞ்சாபின் ஜலந்தரை சேர்ந்த பாடகரும் பாடலாசிரியருமான தீப் சந்தலின் பல பாடல்கள் யூடியூபில் உலா வருகின்றன. M.A M.Phil பட்டதாரியான இவரது பாடல்களான பெஹ்லி வார் மற்றும் ரங் சாவ்லாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்த 5 பேரும், விர்ச்சுவலாக நடைபெற உள்ள ஜோஷ் ஆப்பின் இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு ஜோஷ் ஆப் பயனர்களை இசை மழையில் நனைய வைக்கப் போகின்றனர்.

  https://share.myjosh.in/profile/49ec7838-eed2-4852-851b-56fa1e5a8c94?u=0x35ca0d2e79c34cb2

  English summary
  Jam with Josh virtual live concert will held on July 29th 5pm in Josh App. 5 musical artistes from different languages will be participated in the concert.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X