twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Avatar The Way Of Water Twitter Review : மாய உலகின் மற்றொரு அதிசயம்.. வியப்பில் ஆழ்த்திய அவதார் 2!

    |

    சென்னை : அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 16ந் தேதியான இன்று வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    அவதார் முதல் பாகத்தின் வசூலைவிட இரண்டாம் பாகம் மிகப்பெரிய வசூலை எட்டும் என சினிமா ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.

    உலகம் முழுதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான அவதார் 2 திரைப்படத்தை, அதிகாலையில் சிறப்பு காட்சியைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.

    ரிலீசுக்கு முன்பே கலெக்ஷனை தட்டித்தூக்கிய அவதார் 2.. எகிறும் எதிர்பார்ப்பு!ரிலீசுக்கு முன்பே கலெக்ஷனை தட்டித்தூக்கிய அவதார் 2.. எகிறும் எதிர்பார்ப்பு!

    ஜேம்ஸ் கேமரூன்

    ஜேம்ஸ் கேமரூன்

    ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவதார் படத்தை கேம்ஸ் கேமரூன் உருவாக்கி இருந்தார். 25 கோடி அமெரிக்க டாலர் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது.

    அவதார் 2 தரமான படைப்பு

    அவதார் 2 தரமான படைப்பு

    அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படத்தை பார்த்து வியந்து போனேன். மயக்கும் காட்சிகள், கண்களுக்கு உண்மையாக விருந்தளித்தன. ஒரு மணிநேர இடைவிடாமல் நீருக்கடியில் இருக்கும் காட்சி பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது. கதை, ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகள் உள்ளன. படத்தில் குறை என்று பார்த்தால் அது நீளம் மட்டுமே, மீண்டும் கண்ணுக்கு விருந்து அளிக்கும் கதையை கேம்ஸ் கேமரூன் கொடுத்து இருக்கிறார்

    கண்களுக்கு விருந்து

    கண்களுக்கு விருந்து

    இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அவதார்: தி வே ஆப் வாட்டர் படத்தின் மூலம் வேறொரு கிரகத்துக்கு நம்மை அழைத்து சென்றுள்ளார். படம் காட்சிக்கு காட்சி கண்களை விரியவைத்து முற்றிலும் பிரமிக்க வைக்கிறது. கதை நீளமாக இருந்தாலும், அது ரசிக்கும்படி உள்ளது. 13 வருடங்களுக்கு முன் அவதார் 1 படம் நிகழ்த்திய ஒரு சினிமா சாதனையை மீண்டும் அவதார் 2 நிகழ்த்தி உள்ளது. அவதார் 2 பார்க்க வேண்டிய படம்.

    ஏமாற்றமளிக்கவில்லை

    ஏமாற்றமளிக்கவில்லை

    அவதார்: தி வே ஆப் வாட்டர் ஏமாற்றமளிக்கவில்லை... அபரிமிதமான கிராபிக்ஸ், நடிப்பு, கதை சொல்லுதல் விதம் என அனைத்தையும் நேசித்தேன். அவதார் 2 ஓர் அற்புதமான அனுபவத்தை கொடுத்தது, கண்ணுக்கு விருந்து அளித்தது.

    அழகான படைப்பு

    அழகான படைப்பு

    3 மணி நேரம் 15 நிமிட காட்சி மிகப்பெரிய உபசரிப்பு, அவதார் முதல் பாகத்தின் தீம் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை இன்னும் தொடும் கதைக்களம். அவதார்: தி வே ஆப் வாட்டர் அழகான படைப்பு என ஒரு நெட்டிசன்ஸ் புகழ்ந்துள்ளார்.

    உணர்வுப்பூர்வமான கதை

    உணர்வுப்பூர்வமான கதை

    நான் இப்போது தான் Avatar 2 படத்தை பார்த்தேன் வியந்தன். இது ஒரு காட்சிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அது ஒரு உணர்வுபூர்வமாக படமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. படத்தின் நுணுக்கமான கதாபாத்திரங்கள், செழுமையான உலகத்தை உருவாக்குதல் மற்றும் நிறைவான கதை ஆகியவை அதன் முன்னோடிகளை விட இதை மிகவும் சிறப்பாக்கின்றன. மேலும் சண்டைக் காட்சிகள் மிகவும் கொடூரமாக உள்ளன படத்தை காட்சிக்கு காட்சி புகழ்ந்துள்ளார்.

    English summary
    Hollywood director James Cameron’s Avatar 2 is all set to release today. Avatar: The Way of Water Twitter review
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X