Jana Nayagan First Single: ஆறுதல் எல்லாம் முடுஞ்சுது.. அடுத்து ஜன நாயகன் முதல் பாட்டு தான்.. ரிலீஸ் தேதி இதோ!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ஜன நாயகன். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இந்த படம் வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக முடிவெடுத்து அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடைசி படம் தான் ஜன நாயகன். இப்படி இருக்கும்போது இந்த படத்தின் ரிலீஸ் என்பது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. இப்படி இருக்கையில் அவரது அரசியல் பயணத்தில் கரூர் பிரச்சாரம் பெரிய பின்னடைவாக மாறிப்போனது. கரூரில் அவரது பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வந்த அவரது ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டனர். இப்படி இருக்கையில், குழந்தைகள் பெண்கள் உட்பட மொத்தம் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை அனைவருக்கும் ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்கையில் ஜன நாயகன் படம் வெளியாகுமா என்ற கேள்விகள் எல்லாம் கூட பலருக்கும் இருந்தது. இப்படி இருக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்று, விஜய்யை சந்திக்க வைத்தனர். அந்த சந்திப்பின்போது விஜய் அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததார்.
ஆறுதல் முடிந்த கையோடு: இப்படி இருக்கும்போது, இந்த ஆறுதல் சந்திப்பு முடிந்த பின்னர் விஜய்யின் அரசியல் வேலைகளும் பரபரப்பாகி உள்ளது. குறிப்பாக ஆளும் திமுக அரசை விமர்சிப்பது தொடங்கி, தனது கட்சியின் கட்டமைப்பை மாற்றியது வரை மிகவும் பரபரப்பாகவே தமிழக வெற்றிக் கழகம் இயங்கிக் கொண்டுள்ளது. இந்த ஆறுதல் சந்திப்புக்குப் பின்னர், ஜன நாயகன் படத்தின் முதல் பாடலை ரிலீஸ் செய்வதற்கான அனைத்து வேலைகளும் வேகமாக நடைபெற்று வருகிறது என்று, வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

முதல் பாடல் ரிலீஸ் தேதி: இது தொடர்பாக அவர் கூறும்போது, நவம்பர் மாதம் 3ஆம் தேதி அல்லது 4ஆம் தேதியில் படத்தின் முதல் பாடலை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே வெளியான தகவலின் படி மலேசியாவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், கூறப்பட்டது. அதற்கான ஏற்பாட்டு வேலைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்வாரா மாட்டாரா என்பது மட்டும் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார். பிஸ்மி இவ்வாறு தெரிவித்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











