»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகிக்கு சென்னையில் பாராட்டு விழா நடக்கிறது.

44 ஆண்டுகளாக திரை உலகில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள ஜானகியை கெளரவிக்கும் விதமாக பாராட்டு விழாநடக்கிறது.

13-ம் தேதி, நேரு விளையாட்டரங்கில் இசையரசி எஸ்.ஜானகி இன்னிசை நிகழ்ச்சிஎன்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஜானகியுடன் சேர்ந்துமுதல்முறையாக ஜேசுதாஸ், எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன், மனோ, பி.பி.சீனிவாஸ், ஏ.எல்.ராகவன், தீபன் சக்ரவர்த்தி, சீர்காழி சிதம்பரம்,உட்பட பல பாடகர்கள் பாட இருக்கிறார்கள்.

மொத்தம் 40 பாடல்கள் இந்த விழாவில் பாடப்படும். நிகழ்ச்சியை மனோரமா துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை நியூ எண்டர்டெயின்மெண்ட்,திரியல் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றனர்

Please Wait while comments are loading...