»   »  சினிமா வாய்ப்பு இல்லேன்னா என்ன.. இது இருக்கே - அசராத ஜனனி ஐயர்!

சினிமா வாய்ப்பு இல்லேன்னா என்ன.. இது இருக்கே - அசராத ஜனனி ஐயர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அசராத ஜனனி ஐயர்!- வீடியோ

சென்னை : நடிகை ஜனனி ஐயர், பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்த 'அவன் இவன்' படத்தில் அறிமுகமான போது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். 'திரையுலகில், இவருக்கு மிகப் பெரிய இடம் காத்திருக்கிறது' என திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டினர்.

அதைத் தொடர்ந்து தமிழ், மலையாள படங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 'தெகிடி' படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். ஆனால், இவர் நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெறாததால், அப்படியே சினிமா வாய்ப்புகளும் குறையத் தொடங்கி விட்டன.

Janani iyer in modeling field

தற்போது, தமிழில், தொலைக்காட்சி என்ற ஒரே ஒரு படம் மட்டுமே, ஜனனியின் கைவசம் உள்ளது. நடிக்க வருவதற்கு முன், மாடலிங் துறையில் இருந்தார் ஜனனி ஐயர். 150-க்கும் மேற்பட்ட, தொலைக்காட்சி விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால், மீண்டும் மாடலிங் துறையில் கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் கூட, சென்னையில் நடந்த ஒரு மாடலிங் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். சினிமா இல்லையென்றாலும் மாடலிங்கில் கலக்குவேன் எனக் கூறுகிறாராம் ஜனனி ஐயர்.

English summary
Janani Iyer, who came to the cinema through modeling, made a huge expectation when she debuted in Bala's 'Avan Ivan'. But since the films he has not received are very popular. Janani has been focusing on modeling again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X