ஜனனியா? குயின்ஸியா? யாரோட டான்ஸ் பெஸ்ட்.. குஷி இடுப்பை பார்த்து அவருக்கு மார்க் போட்ட ரசிகர்கள்!
சென்னை: வெண்மேகம் தொட்டு தொட்டு பாடலுக்கு ஜனனி க்யூட்டாக டான்ஸ் ஆடினாலும், மல்லிப்பூ பாடலுக்கு குயின்ஸி போட்ட குத்தாட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஜனனிக்கு ஆரம்பத்தில் இருந்தே அவரது அழகை பார்த்து மயங்கிய ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்திருந்த நிலையில், தற்போது குயின்ஸி கொஞ்சம் கொஞ்சமாக நெக்ஸ்ட் ஷிவானியாக மாற முயற்சித்து வருகிறார்.
கருப்பு சேலை அணிந்து கொண்டு கவர்ச்சி சிலையாக மாறிய குயின்ஸி வெந்து தணிந்தது காடு பாடலுக்கு போட்ட நடனம் பலரது கண்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.

குஷி இடுப்பு
குஷி படத்தில் ஜோதிகா கருப்பு டிரெஸ் அணிந்து கொண்டு தனது அழகான இடுப்பை காட்ட அதை விஜய் பார்க்கும் காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாக அமைந்துள்ள நிலையில், அதே போன்ற சேலையை இன்று அணிந்து கொண்டு பிக் பாஸ் ரசிகர்களுக்கு குஷி இடுப்பை ஞாபகப்படுத்தி வருகிறார் குயின்ஸி.

ஜனனி டான்ஸ்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான குரு படத்தில் ஐஸ்வர்யா ராய் நடனமாடிய வெண்மேகம் தொட்டு தொட்டு பாடலுக்கு ஜனனி சும்மா சாய் பல்லவி போல அசத்தலான நடனத்தை ஆடி அவரது ஆர்மியினரை உற்சாகத்தில் ஆழ்த்தினர். செய்தி வாசிக்கும் போட்டியிலும் ஜனனியின் பர்ஃபார்மன்ஸ் சூப்பராக இருந்தது.

மல்லிப்பூ பாடலுக்கு
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான மல்லிப்பூ பாடலுக்கு குயின்ஸி கருப்பு நிற சேலையை அணிந்து கொண்டு போட்ட குத்தாட்டம் ஹவுஸ்மேட்களை மட்டுமின்றி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. கருப்பு சேலையில் கவர்ச்சி சிலையாக குயின்ஸி ஆடும் அழகை கண்டு ரசிக்கவே ஏகப்பட்ட ரசிகர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பக்கம் சென்று விட்டனர்.

செம குத்தாட்டம்
குயின்ஸி மல்லிப்பூ பாடலுக்கு நடனமாட, பிக் பாஸ் வீட்டில் இருந்த விக்ரமன், மணிகண்டன் பத்து தல பாம்பா என்கிற வரிகளுக்கு உள்ளே புகுந்து நடனமாடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், கவர்ச்சி ததும்ப குயின்ஸி ஆடியதால் ரசிகர்களும் அவருக்கே அதிக மார்க்குகளை சோஷியல் மீடியாவில் போட்டு வருகின்றனர்.

மைனா நந்தினி மாஸ்
ஜனனி, குயின்ஸி ஒரு பக்கம் போட்டி போட்டு யார் அழகா டான்ஸ் ஆடுறாங்க என ஆடி வந்த நிலையில், மணிகண்டன் உடன் இணைந்து போட்டுத் தாக்கு பாடலுக்கும் மைனா நந்தினி போட்ட வெறித்தனமான டான்ஸும் ரசிகர்களை கைதட்ட வைத்துள்ளது. ஆனால், இதெல்லாம் வேணாங்க, எங்க அசீமை மீண்டும் பழைய படி சண்டை போட வையுங்க, ரொம்ப போர் அடிக்குதுன்னு ரசிகர்கள் கெஞ்சாத குறையாக கேட்டு வருகின்றனர். அடுத்தவர்கள் சண்டை போட்டால் திட்டலாம், சண்டை போடாமல் டான்ஸ் ஆடினால் போர் அடிக்குது.. என்னவொரு கொடுமை!


Click it and Unblock the Notifications