»   »  50வது வயதில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த பிரபல பாடகி

50வது வயதில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த பிரபல பாடகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஞ் ஏஞ்சல்ஸ்: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தங்கை ஜானட் ஜாக்சன் 50 வயதில் ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

மறைந்த பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் தங்கையான பாப் பாடகி ஜானட் ஜாக்சன் கடந்த 2012ம் ஆண்டு வளைகுடா நாடுகளில் ஃபேஷன் பிராண்டுகளை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வரும் தொழில் அதிபர் விஸ்ஸாம் அல் மனாவை திருமணம் செய்து கொண்டார்.

Janet Jackson welcomes baby boy at 50

இந்நிலையில் கர்ப்பமான ஜானட் கடந்த செவ்வாய்க்கிழமை ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது ஜானட்டின் முதல் குழந்தை ஆகும். 50வது வயதில் அவர் தாயாகியுள்ளார். குழந்தைக்கு ஈஸா என பெயர் வைத்துள்ளனர்.

இது குறித்து ஜானட்டின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜானட் ஜாக்சன் மன அழுத்தம் இல்லாமல் சுகாதாரமான முறையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவர் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் ஜாக்சனை போன்றே ஜானட்டும் பாப் உலகில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Janet Jackson, sister of late King Pop Michael Jackson has given birth to a baby boy at the age of 50.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil