varma - மீண்டும் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய ஜான்வி!
வர்மா படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவில்லை என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது.
Recommended Video

சென்னை: வர்மா படத்தின் நாயகி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், அதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரது தமிழ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழில் இருந்து பாலிவுட்டிற்கு சென்று பெரும் பேரும் புகழும் அடைந்தவர்களில் நடிகை ஸ்ரீதேவியும் ஒருவர். தயாரிப்பாளர் போனிகபூரைத் திருமணம் செய்து கொண்ட அவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழில் புலி படத்தில் நடித்தார்.
கடந்தாண்டு துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றவர் எதிர்பாராதவிதமாக குளியலறையில் தவறி விழுந்து மரணமடைந்தார்.

ஜான்வி:
அவரது மறைவிற்குப் பின் தான், அவர் பெரிதும் எதிர்பார்த்த அவரது மகள் ஜான்வி நடித்த தடக் படம் ரிலீசானது. இப்படத்தில் ஜான்வியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அப்படத்தைத் தொடர்ந்து அவர் மேலும் சில பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

கௌரவத் தோற்றம்:
இதற்கிடையே போனிகபூர் நடிகர் அஜித்தை வைத்து பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரித்து வருகிறார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் ஜான்வி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

வர்மாவில் ஜான்வி?
பின்னர் விக்ரம் மகன் த்ருவ் நாயகனாக நடித்து வரும் வர்மா படத்தின் மூலம் அவர் தமிழில் நாயகியாக அறிமுகமாக இருப்பதாகக் கூறப்பட்டது. ஏற்கனவே வர்மா படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் அப்படம் மூலமாகவா மயிலு மகள் தமிழில் அறிமுகமாகிறார் என்ற கேள்வி எழுந்தது.

ரசிகர்கள் ஆசை:
ஆனால், எப்படியோ தமிழில் நடித்து அம்மாவைப் போல் ஜான்வியும் இங்கு முன்னணி நடிகையாக ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பதே ஸ்ரீதேவி ரசிகர்களின் ஆசையாக இருந்தது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என அவர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்:
இந்நிலையில் வர்மா படத்தில் பனிதா சந்து என்ற பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜான்வி அப்படத்தில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் ஸ்ரீதேவி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











