Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உங்களுக்கு முத்தம் கொடுக்கட்டா.. ஜொள்ளு விட்ட நெட்டிசன்.. ஸ்ரீதேவி மகள் என்ன பண்ணாங்க தெரியுமா?
மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட்டின் இளம் நடிகையுமான ஜான்வி கபூர் நெட்டிசனின் குறும்புத்தனமான கேள்விக்கு வித்தியாசமாக பதிலடி கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் ஜான்வி கபூர் நடித்த பேய் படமான ரூஹி சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
காஞ்சனா
3
பட
நடிகைக்கு
கொரோன
உறுதி..
வீட்டிலேயே
தனிமைப்படுத்தப்பட்டார்!
அந்த படத்தின் வெற்றியை முன்னிட்டு ரசிகர்களுடன் ஒரு Ask Me Anything கேள்வி பதில் ஷெஷனை வைக்கும் போது தான் இந்த சுவாரஸ்யம் நடந்துள்ளது.

வலிமை பட தயாரிப்பாளர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். ஏற்கனவே பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் பிரச்சனை அதிகரித்து இருந்தாலும், ஜான்வி கபூருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

10 மில்லியன் ரசிகர்கள்
மராத்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற சைரத் படத்தின் இந்தி ரீமேக்கான ததக் படம் மூலம் 2018ம் ஆண்டு ஹீரோயின் ஆன ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்குள் 10 மில்லியன் ரசிகர்கள் இணைந்து விட்டனர். இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக அடிக்கடி கவர்ச்சிகரமான போட்டோக்களை பதிவிட்டும் வருகிறார்.

பேய் படம்
நெட்பிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரீஸ், கன்ஜன் சக்ஸேனா உள்ளிட்ட படங்களில் நடித்த ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரூஹி பேய் படம் பாலிவுட்டில் மீண்டும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் அந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரசிகர்களுடன் ஒரு சாட் செஷனை நடத்தினார் ஜான்வி கபூர்.

கிஸ் பண்ணலாமா
ரசிகர்களின் ஏகப்பட்ட கேள்விகளுக்கு தனது ஸ்டைலில் வித்தியாசமாகவும், படு ஜாலியாகவும் பதில் அளித்த வந்த ஜான்வி கபூரிடம் நெட்டிசன் ஒருவர், கிஸ் பண்ணலாமா? என்கிற கேள்வியை எழுப்ப, கொஞ்சம் கடுப்பான ஜான்வி கபூர் அவருக்கு வித்தியாசமான முறையில் அளித்த பதில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாஸ்க் போட்டுக் கொண்டு
சட்டென மாஸ்க் மாட்டி இருக்கும் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அந்த நெட்டிசனுக்கு நறுக்கென 'நோ' சொல்லிவிட்டார் ஜான்வி கபூர். ஜான்வி கபூரின் இந்த அதிரடியான போஸ்ட்டை பார்த்த பலரும், அந்த இளைஞருக்கு சரியான பதிலடி இது என ஜான்வியை பாராட்டி வருகின்றனர்.
Recommended Video

தோஸ்தானா 2
ரூஹி படத்தைத் தொடர்ந்து தோஸ்தானா 2 படத்தில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். ஜான் ஆபிரகாம், அபிஷேக் பச்சன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த தோஸ்த்தானா திரைப்படம் சர்ச்சைகளை கிளப்பி வெற்றி பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்தில் நடிகர் கார்த்திக் ஆர்யானுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். மேலும், குட் லக் ஜெர்ரி படத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ளார்.