நாக்கு முக்கா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி மகள்...தீயாய் வைரலாகும் வீடியோ
மும்பை : மறைந்த நடிகை ஸ்ரீதேவி - பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், 2018 ல் தடக் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு நடிகையாக அறிமுகமானார். கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி உள்ளிட்ட படங்களில் நடித்து, தற்போது முன்னணி நடிகையாகி உள்ளார்.
Recommended Video
தற்போது அக்ஷய் குமாருக்கு ஜோடியாக தோஸ்தானா 2 படத்தில் நடிக்க உள்ளார். அத்துடன் ஆனந்த் எல் ராய் இயக்கும் குட் லக் ஜெர்ரி படத்திலும் ஜான்வி நடித்து வருகிறார்.

போட்டி போட்டு கவர்ச்சி ஃபோட்டோ
ஜான்வி கபூரான தங்கை குஷி கபூரும் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகின்றனர்.

குத்தாட்டம் போட்ட ஜான்வி கபூர்
இந்நிலையில் ஜான்வி கபூர், தோழிகளுடன் இணைந்து AKSA கேங் என்ற ஒன்றை வைத்துள்ளார். இவர்கள் அனைவரும் இணைந்து பிரபலமான கோலிவுட் பாடலான நாக்கு முக்கா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட, வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஜான்வி கபூர்.
ஃபேமசான ஜான்வி கபூர் வீடியோ
காதலில் விழுந்தேன் படத்தில் விஜய் ஆன்டனி இசையில் அமைந்த நாக்கு முக்கா பாடலுக்கு நடிகர் நகுல், தரை லோக்கலாக இறங்கி குத்தாட்டம் போட்டிருப்பார். இந்த பாடல் பயங்கர ஃபேமசானது. அதே போல் தற்போது ஜான்வி கபூர் ஆடிய வீடியோவும் ஃபேமசாகி உள்ளது.

வைரலாகும் வீடியோ
இந்த வீடியோவை பிரபலங்கள் பலரும் பாராட்டி உள்ளனர். இதனை இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் இந்த வீடியோ பயங்கர வைரலாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











