»   »  ஜப்பானில் அட்ரஸ் தொலைத்த தமிழ் நடிகை: காப்பாற்றிய டாக்சி டிரைவர்

ஜப்பானில் அட்ரஸ் தொலைத்த தமிழ் நடிகை: காப்பாற்றிய டாக்சி டிரைவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

படப்பிடிப்பிற்காக ஜப்பான் போன இடத்தில் முகவரியை தொலைத்துவிட்டு தடுமாறியிருக்கிறார் தமிழ் நடிகை ஒருவர். அவரை பத்திரமாக இருப்பிடத்திற்கு கொண்டுவந்து சேர்த்துள்ளார் அங்குள்ள டாக்சி டிரைவர் ஒருவர். அவர் ரஜினி ரசிகராம்.

அம்புலி 3டி, ஆ படங்களின் வெற்றிகளை தொடர்ந்து இயக்குனர் இரட்டையர்கள் ஹரி-ஹரீஷ் இயக்கும் புதிய படம் ஜம்போ 3டி.

கோகுல் இந்தப் படத்தில் நாயகன் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் சுகன்யா, பேபி ஹம்சிகா, அஞ்சனா, லொள்ளுசபா ஜீவா, ஈரோடு மகேஷ், யோக் ஜப்பீ மற்றும் 'கும்கி' அஷ்வின் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

எம்.எஸ்.ஜி மூவீஸ் சார்பில் ஜி.ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் பெரும்பாலும் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதாநாயகி அஞ்சனா கீர்த்தி தனது ஜம்போ அனுபவத்தை உற்சாகம் பொங்க கூறியுள்ளார்.

Japanese cab driver rescues Tamil actress

இரட்டை இயக்குநர்கள்

ஜம்போ படத்தில் இயக்குனர்கள் ஹரி - ஹரீஷ் உடன் பணிபுரிவது மிக இனிதான ஒன்றாய் அமைந்தது. இவர்கள் இருவரும் வேகமாகவும், விவேகமாகவும் வேலை செய்ய கூடியவர்கள் என்றார். இப்படத்தில் வேலை செய்தது பல அருமையான அனுபவங்களை தந்தது.

பொம்மை போல

"படத்தில் ஒரு காட்சியில் நான் ஜப்பான் பதுமையாக நடிக்க வேண்டியிருந்தது. எனக்கு கண் இமைக்காமல், சலனமற்ற பொம்மையாக அசைவில்லாமல் நடிக்க சொல்லி கொடுத்தார்.

தமிழர்கள் வரவேற்பு

படத்தின் 90% ஜப்பானின் டோக்கியோ, டோயாமா நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. டோக்கியோ தமிழ் சங்கத்தினர் எங்களை கனிவாய் வரவேற்னர்

டாக்சி டிரைவர்

ஒரு நாள் தனியாக ஷாப்பிங் சென்றபொழுது ஜப்பானிய மொழியில் எழுதிய விலாசத்தை தொலைத்துவிட்டேன். ஒரு ஜப்பானிய டாக்சி ஓட்டுனர் எனக்கு உதவி புரிந்தார். நான் இந்தியாவை சேர்ந்தவள் என்றவுடன் ரஜினிகாந்தை பற்றி பேசினார். தமிழிலும் பேசினார் என்றார்

ஜப்பான் நடிகர்கள்

ஜப்பானிய நடிகர் நடிகைகளுடன் நடித்தோம். ஜப்பான் பத்திரிக்கைகளில் எங்களை பற்றி செய்திகள் வந்தது மிகவும் பெருமையாக இருந்தது.

குழந்தைகளை கவரும்

அழகிய பேபி ஹம்சிகா இப்படத்தில் முக்கியமான கதாப்பதிரத்தில் நடித்திருக்கிறார். நகைச்சுவைமிக்க 3டி படமாய் உருவாகி வரும் இப்படம் குழந்தைகளை மிகவும் கவரும்." என கூறினார் நடிகை அஞ்சனா.

English summary
Anjena Kirti who is a part of Jumbo 3D, directed by Hari and Hareesh (of Ambuli 3D and Aaaah fame), had quite an experience while shooting for the film in Japan. The air-hostess-turned-actress, we hear, recently lost her way in Japan and was helped by a Tamil-speaking Japanese cab driver.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil