»   »  'ஜே ஜே' ஹீரோயினா இது... ஆளே மாறிய அமோகா!

'ஜே ஜே' ஹீரோயினா இது... ஆளே மாறிய அமோகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த சில வருடங்களுக்கு முன் நாம் நிறைய படங்களில் பார்த்த நடிகைகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

அப்படி நடிகைகள் பற்றி விவரங்கள் வந்தாலும் பலரின் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

சமீபத்தில், அப்படி 'ஜேஜே' பட நடிகை அமோகாவின் லேட்டஸ்ட் படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

நடிகை படம்

நடிகை படம்

ஒரு காலத்தில் கனவுக் கன்னியாக இருந்தவர்கள் இப்போது மிகவும் மோசமாக இருக்கிறாரே என்று ரசிகர்கள் புலம்புவர். அப்படி அண்மையில் ஒரு நடிகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

ஜேஜே பட நடிகை

ஜேஜே பட நடிகை

மாதவன் நடித்த 'ஜே ஜே' படத்தில் நடித்த பிரியங்கா கோத்தாரி என்கிற அமோகாவின் லேட்டஸ்ட் படம் தான் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தப் புகைப்படத்தில் ஆளே மாறி தோற்றமளிக்கிறார் அமோகா.

தொழில் அதிபரை திருமணம் செய்த அமோகா

தொழில் அதிபரை திருமணம் செய்த அமோகா

2010-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த 'கச்சேரி ஆரம்பம்' படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியிருந்தார் அமோகா. அதன் பிறகு டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

எப்படி இருந்த நடிகை..?

எப்படி இருந்த நடிகை..?

பல நாட்களுக்கு பிறகு டெல்லியில் நடைபெற்ற கால்பந்து போட்டி தொடக்க விழாவில் பிரியங்கா கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வைரல் ஆகியிருக்கிறது. எப்படி இருந்த நடிகை இப்படி ஆகிட்டாரே என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.

English summary
Priyanka Kothari Amoha, who starred in Madhavan's 'Jay Jay. She was married to a Delhi-based businessman. The recent photo of amoha is now goes viral.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X