»   »  ஜெயலலிதா காலமானார்: கண்ணீரில் தமிழ் திரையுலகம்

ஜெயலலிதா காலமானார்: கண்ணீரில் தமிழ் திரையுலகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் மரண செய்தி அறிந்து தமிழ் திரையுலகம் கண்ணீர் சிந்தி வருகிறது.

உடல் நலக்குறவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்து வந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது.

Jaya no more: Kollywood in tears

இதையடுத்து அவரது நிலைமை மோசமானது. அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகமும், மிக மிக மோசமாக உள்ளது என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியலும் அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பலனில்லாமல் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 68. ஜெயலலிதாவின் நிலைமை கவலைக்கிடம் என்ற செய்தி அறிந்ததும் தமிழ் திரையுலகினர் அவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து வந்தனர். அதிசயம் நடக்கும், அம்மா எழுந்து வருவார் என்று நம்பினர்.

நம்பிக்கையுடன் இருந்தவர்கள் ஜெயலலிதாவின் மரண செய்தி அறிந்து சோகத்தில் ஆழ்ந்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

English summary
Kollywood is in tears after coming to know about CM Jayalalithaa's demise.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil