»   »  ஜெயலலிதா நடித்த முதல் படம் எந்த மொழியில் தெரியுமா....?

ஜெயலலிதா நடித்த முதல் படம் எந்த மொழியில் தெரியுமா....?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தனது 68 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவரது பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் அவரது தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா நடிப்பில் வெளியான படங்கள் மற்றும் அவரது குரலில் வெளியான பாடல்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் சுமார் 140 க்கும் அதிகமான படங்களில் ஜெயலலிதா நடித்திருக்கிறார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

1948 ம் ஆண்டு பிப்ரவரி 24 ம் தேதி ஜெயராம்- வேதவள்ளி தம்பதியருக்கு மகளாகப் பிறந்த ஜெயலலிதா இன்று தனது 68 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஜெயலலிதாவிற்கு 2 வயதாக இருக்கும் போது அவர் தந்தை இறந்து விட, அதற்குப் பின்னர் அவரின் அம்மா சந்தியா என்ற பெயரில் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

ஆங்கிலப்படம்

ஆங்கிலப்படம்

எபிச்ட்லே என்ற ஆங்கிலப் படம் தான் ஜெயலலிதா நடிப்பில் வெளியான முதல் படம்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் சுமார் 140 க்கும் அதிகமான படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

வெண்ணிற ஆடை

வெண்ணிற ஆடை

1965 ம் ஆண்டு வெளியான வெண்ணிற ஆடைதான் தமிழில் ஜெயலிதாவின் முதல் படம். தொடர்ந்து அதே ஆண்டில் வெளியான ஆயிரத்தில் ஒருவன்
திரைப்படம் ஜெயலலிதாவை தமிழ்நாட்டு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. ஆயிரத்தில் ஒருவன் தான் எம்.ஜி.ஆர்- ஜெயலிதா நடிப்பில் வெளியான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா

தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகள் என்று புகழ்பெற்ற இந்த ஜோடி ஆயிரத்தில் ஒருவன், தேர் திருவிழா, காவல்காரன், குடியிருந்த கோயில், நம் நாடு, தேடி வந்த மாப்பிள்ளை, சந்திரோதயம், அடிமைப்பெண், ராமன் தேடிய சீதை, காதல் வாகனம், ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், குமரி கோட்டம், கன்னி தாய், என் அண்ணன், எங்கள் தங்கம், ஒரு தாய் மக்கள், ஒளி விளக்கு, ஆயிரத்தில் ஒருவன், கணவன், நீரும் நெருப்பும், பட்டிக்காட்டு பொன்னையா, கண்ணன் என் காதலன், அன்னமிட்ட கை, புதிய பூமி மற்றும் அரச கட்டளை என்று மொத்தம் 26 படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

பின்னணிப்பாடகி

பின்னணிப்பாடகி

சிறந்த நடிகை மட்டுமின்றி சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர் ஜெயலிலதா. அடிமைப் பெண் படத்தில் இடம்பெற்ற 'அம்மா என்றால் அன்பு' 10க்கும் அதிகமான பாடல்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார்.

பட்டங்களும், விருதுகளும்

பட்டங்களும், விருதுகளும்

பாரதிதாசன் பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் ஆகிய 5 பல்கலைக்கழகங்கள் ஜெயலிலதாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்திருக்கின்றன.மேலும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதை 1977 ம் ஆண்டு இவருக்குக் கிடைத்தது.

5 முறை

5 முறை

1991, 2001, 2002, 2011, 2015 என்று தமிழக முதல்வராக 5 வது முறை பதவியில் நீடித்து வருகிறார் ஜெயலிலதா. ஜானகி ராமச்சந்திரனுக்குப் பின் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 வது முதல்வர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

நீங்க நல்லா

நீங்க நல்லா

நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற படம் தான் ஜெயலிலதா நடிப்பில் வெளியான கடைசி படம். இப்படத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக சிறப்புத் தோற்றத்தில் ஜெயலிதா நடித்திருந்தார்.விசு இயக்கத்தில் நிழல்கள் ரவி, மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீதிவ்யா, விசு, சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான இப்படம் தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

தெய்வ மகன், சூரியகாந்தி

தெய்வ மகன், சூரியகாந்தி

இன்று ஜெயலிலதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சன் ஃலைப் சேனலில் தெய்வ மகன், சூரியகாந்தி மற்றும் ஜெயா டிவியில் குமரிக்கோட்டம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம்.

English summary
Today Tamil Nadu Chief Minister Jayalalitha Celebrates her 68th Birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil