ரஜினி படத்தில் திமிர் பிடித்த வில்லி... தயங்கிய சிவாஜி பாராட்டிய ஜெயலலிதா
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை வைத்து நான்கு படங்களை இயக்கியுள்ளவர் இயக்குநர் பி.வாசு.
குசேலன் படத்தை தவிர்த்து மன்னன், பணக்காரன் மற்றும் சந்திரமுகி திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
அந்த வகையில் மன்னன் திரைப்படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை கூறியிருக்கிறார் பி.வாசு

ரஜினி ரசிகை
நடிகர் ரஜினியும் ஜெயலலிதா அவர்களும் கிட்டத்தட்ட ஒரே வயதுடையவர்கள். ஆனால் திரைத்துறையை பொறுத்தவரை ரஜினிகாந்த்திற்கு ஜெயலலிதா சீனியர். 1970-களின் பிற்பகுதியில் ரஜினி முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் நாவலை படமாக்கினால் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கலாம் என்று ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ரஜினிகாந்த் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறினாராம். அது மட்டுமின்றி ரஜினியின் ரசிகையாக இருந்திருக்கிறார் ஜெயலலிதா.

பிரச்சனை
பின்னர் ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சர் ஆன பின்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பொதுவாக முதலமைச்சர் இருக்கும் பகுதியில் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். அதனால் எளிதாக யாரும் அந்தப் பகுதிக்கு சென்று வர முடியாது. ரஜினிகாந்தும் அதே தெருவில் வசித்து வந்ததால் இருவருக்குள்ளும் பிரச்சனை எழுந்ததாக அப்போது பல செய்திகள் வந்துள்ளது. பின் 1996-ல் நடந்த தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக ரஜினிகாந்த் பிரச்சாரம் செய்தார்.

எதிர்வினை
அந்தத் தேர்தலில் திமுக கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்றது. அரசியல் ரீதியாக சில சருக்கல்களை ஜெயலலிதா அம்மையார் சந்தித்தார். அப்போது சினிமாவில் இருந்த தனது தோழி மனோரமாவை கூட ரஜினிகாந்தின் படங்களில் நடிக்க வேண்டாம் என்று ஜெயலலிதா கூறியதாக ஒரு செய்தி உண்டு. இப்படி எதிரும் புதிருமாக இருந்தவர்கள் ஒரு கட்டத்தில் மீண்டும் நட்புறவோடு பழகத் தொடங்கினார்கள். தனுஷ் மற்றும் ஐஷ்வர்யாவின் திருமணத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டார்.

மன்னன்
படையப்பா படமே ஜெயலலிதாவைமையப்படுத்தி எழுதப்பட்ட கதை என்று பரவலாக பேசப்பட்டது. அப்படி இருக்கும் பொழுது அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த மன்னன் திரைப்படமும் அதே போன்ற ஒரு கதைக்களம் கொண்டதுதான். அதன் தயாரிப்பாளர் சிவாஜி கணேசன் படத்தை பார்த்துவிட்டு, என் தயாரிப்பில் இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டாயே என்று பி.வாசுவிடம் கேட்டாராம். அதற்கு, நீங்களும் ஜெயலலிதா அம்மையாரும் சேர்ந்தே சவாலே சமாளி படத்தில் இதே போன்ற கதையில் நடித்துள்ளீர்கள் என்று கூறினாராம். ஆனால் அவர்கள் நினைத்தது போல் இல்லாமல், ஜெயலலிதா அந்தப் படத்தை பார்த்து மிகவும் ரசித்ததாக பி.வாசு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











