»   »  3 மொழிகளில் படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு: தலைப்பு கூட ரெடி!

3 மொழிகளில் படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு: தலைப்பு கூட ரெடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பிரபல தெலுங்கு இயக்குனர் தாசரி நாராயண ராவ் படமாக்குகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் எடுக்கப்பட உள்ள இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் தாசரி நாராயண ராவ் இயக்குகிறார்.

Jayalalithaa biopic on cards

அவர் தனது படத்திற்கு அம்மா என்ற தலைப்பை தேர்வு செய்து பதிவும் செய்துவிட்டாராம். திரைக்கதை பணிகள் நடந்து வருகிறதாம். படத்தை தாசரி நாராயண ராவே தயாரிப்பதாக கூறப்படுகிறது.

யார் ஜெயலலிதாவாக நடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. ஜெயலலிதாவாக நடிக்க ஆசையாக இருப்பதாக நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் த்ரிஷா தெரிவித்துள்ளனர்.

ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Legendary Telugu director Dasari Narayana Rao is making a biopic on former CM Jayalalithaa in three languages. He has even registered the title 'Amma'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil