twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரவிச்சந்திரன் மரணம்: ஜெயலலிதா இரங்கல்; ஸ்டாலின் நேரில் அஞ்சலி

    By Shankar
    |

    Jayalalitha
    சென்னை: மறைந்த நடிகர் ரவிச்சந்திரனுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் துணை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    உடல்நிலைக் கோளாறு காரணமாக நேற்று இரவு காலமானார் ரவிச்சந்திரன். மறைந்த ரவிச்சந்திரனின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் அறிக்கை:

    பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 25.07.2011 அன்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

    காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, குமரிப்பெண், நான், மூன்றெழுத்து, இதயக்கமலம், அதே கண்கன், உட்பட சுமார் 180 திரைப்படங்களில் முத்திரை பதித்து, தமிழ் திரைப்பட ரசிகர்களால் வெள்ளி விழா நாயகன் என்று போற்றப்பட்டு, அவர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன் அவர்கள்.

    1964ஆம் ஆண்டு தனது கலைப் பயணத்தைத் துவக்கி, சமீப காலம் வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரவிச்சந்திரன் அவர்களுடைய மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் பரிணமித்தவர் ரவிச்சந்திரன்.

    ரவிச்சந்திரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்".

    -இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

    முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி

    ரவிச்சந்திரன் உடலுக்கு முன்னாள் துணை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "ரவிச்சந்திரன் கலைஞரிடம் அன்பும், மரியாதையும் கொண்டவர். ரவிச்சந்திரனின் மறைவு திரையுலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கலைஞர் இரங்கல் தெரிவித்தார்.

    ரவிச்சந்திரனை இழந்து வாடிக்கொண்டிருக்கின்ற அவரது குடும்பத்தினருக்கு கலைஞர் அவர்கள் சார்பிலும், திமுக சார்பிலும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.

    English summary
    Chief Minister Jayalalitha and former Deputy CM M K Stalin condoled for the death of actor Ravichandiran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X