»   »  ஜெ.வின் நன்றிக்கடிதம்... "தபால் கண்டு கபால்" மகிழ்ச்சியில் பார்த்திபன்

ஜெ.வின் நன்றிக்கடிதம்... "தபால் கண்டு கபால்" மகிழ்ச்சியில் பார்த்திபன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பதவியேற்றது தொடர்பாக, நடிகர் பார்த்திபனின் வாழ்த்துக்கு முதல்வர் ஜெயலலிதா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில், அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.

Jayalalithaa thanks actor Parthiepan

இது தொடர்பாக ஜெயலலிதாவிற்கு திரையுலகப் பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அந்தவகையில், நடிகர் பார்த்திபனும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தினை நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கூடவே, தனது பாணியில் கடிதம் கண்ட மனநிலையையும் அவர் விவரித்துள்ளார்.

அதில் அவர், ‘கபால்னு ஒரு மகிழ்ச்சி கடிதம் கண்டதும். குழந்தைக் கடத்தல் தடுக்கப்பட்ட என்ற நற்செய்தியும் வரும் என நம்பிக்கை' எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து குழந்தைக் கடத்தலுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்களில் நடிகர் பார்த்திபனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
TN CM J Jayalalithaa had sent in a thank you note to actor/director Parthiepan. This is in response to the congratulatory note that Parthiepan sent to Jayalalithaa on her recent success in the Tamil Nadu Assembly elections.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil