»   »  மலேசிய கலைவிழாவுக்கு சென்ற இடத்தில் ஜெயம் ரவி, ஆரி மருத்துவமனையில் அனுமதி

மலேசிய கலைவிழாவுக்கு சென்ற இடத்தில் ஜெயம் ரவி, ஆரி மருத்துவமனையில் அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil
காயம் காரணமாக ஜெயம் ரவி, ஆரி மருத்துவமனையில் அனுமதி...வீடியோ

கோலாலம்பூர்: மலேசியாவில் நட்சத்திர கலை விழாவில் கலந்து கொள்ள சென்ற நடிகர்கள் ஜெயம் ரவி, ஆரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி திரட்ட மலேசியாவில் நட்சத்திர கலை விழாவை நடத்தியுள்ளனர். கலை நிகழ்ச்சி தவிர்த்து நடிகர்கள் இடையேயான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது.

போட்டிகளில் நடிகர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

 அதர்வா

அதர்வா

ஆர்யா மற்றும் அதர்வா தலைமையிலான அணிகள் மோதிய கால்பந்தாட்டப் போட்டி நடந்தது. அப்போது அதர்வா அணியை சேர்ந்த நடிகர் ஆரி கோல் போட முயன்றார்.

 காயம்

காயம்

ஆர்யா அணியை சேர்ந்த ஒருவர் ஆரியை தடுக்க முயன்றபோது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஆரி.

ரவி

ரவி

மருத்துவமனையில் ஆரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது நலமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மலேசியா சென்ற இடத்தில் ஜெயம் ரவிக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

 காய்ச்சல்

காய்ச்சல்

ஜெயம் ரவிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விழா நடத்த சென்ற இடத்தில் இப்படியாகிவிட்டதே என்று பிரபலங்கள் வருத்தப்பட்டனர்.

English summary
Actors Jayam Ravi and Aari who went to Malaysia to participate in the Natchathira Kalaivizha was admitted in a hospital there. Aari suffered a knee injury while participated in a football match. Jayam Ravi had high temperature.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X