»   »  மீண்டும் மோதிக்கொள்ளும் தனி ஒருவன்கள், ஜெயம் ரவி-அரவிந்த்சாமி... போகனுக்காக!

மீண்டும் மோதிக்கொள்ளும் தனி ஒருவன்கள், ஜெயம் ரவி-அரவிந்த்சாமி... போகனுக்காக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனி ஒருவனில் தனித்தனியாக ஹிட்டடித்த ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இருவரும் மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் மோதவுள்ளனர்.

சரிவில் கிடந்த ஜெயம் ரவியின் மார்க்கெட்டை முதலில் தூக்கி நிறுத்திய பெருமை ரோமியோ ஜூலியட் இயக்குநர் லட்சுமணையே சேரும்.

இந்நிலையில் மீண்டும் ஒருமுறை ஜெயம் ரவி- ஹன்சிகாவை இயக்கவிருக்கிறார் லட்சுமணன்.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

கடந்தளவில் பெரிய ஹிட்கள் இன்றி தொடர்ந்து தவித்து வந்த ஜெயம் ரவியை இயக்குநர் லட்சுமணனின் ரோமியோ ஜூலியட் படம் வெளியாகி காப்பாற்றியது. ரோமியோ ஜூலியட் அளித்த நம்பிக்கையால் தனி ஒருவன், பூலோகம் ஆகிய படங்கள் கடந்த வருடத்திலேயே வெளியாகி ஜெயம் ரவிக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தன.

தனி ஒருவன் கூட்டணி

தனி ஒருவன் கூட்டணி

இதுவரையிலான ஜெயம் ரவியின் பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு அளித்த படம் தனி ஒருவன். அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருந்த இப்படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக மாறியது. படம் வெளியான புதிதில் தனி ஒருவன் ஜெயம் ரவியா? அரவிந்த் சாமியா? என்று ரசிகர்கள் பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு இந்தக் கூட்டணி ரசிகர்களைக் கவர்ந்தது.இந்நிலையில் இயக்குநர் லட்சுமணனின் போகன் படத்திற்காக ஜெயம் ரவி- அரவிந்த் சாமி கூட்டணி மீண்டும் இணைகிறது.

போகன்

போகன்

ரோமியோ ஜுலியட்டைத் தொடர்ந்து ஜெயம் ரவியை மீண்டும் இயக்கும் லட்சுமணன் அப்படத்திற்கு 'போகன்' என்று வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க, ஒரு முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கவிருக்கிறார்.

மீண்டும் போலீஸ்

மீண்டும் போலீஸ்

தனி ஒருவன் படத்தைத் தொடர்ந்து போகனிலும் ஜெயம் ரவி போலீசாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கான போட்டோ ஷூட் மார்ச் முதல் வாரத்தில் நடைபெறவிருக்கிறது. மார்ச் மாதக் கடைசியில் அரவிந்த் சாமி இந்தப் படத்தில் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி ஆக்ஷன்கள்

அதிரடி ஆக்ஷன்கள்

அதிரடி ஆக்ஷன்+சண்டைக் காட்சிகளுடன் உருவாகும் போகன் சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. தனி ஒருவன், ரோமியோ ஜூலியட் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகத்திற்கும் எகிறிக் கிடப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After a Block Buster Hit of Thani Oruvan Jayam Ravi once again Join Hands with Arvind Swami for Bogan. The Official Announcement can be Expected Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil