சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறிய ஜெயம் ரவி.. என்ன அதுக்குள்ள இப்படி மாறிட்டாரே மனுஷன்?

சென்னை: கோமாளி படத்திலேயே வயதான கெட்டப் போல ஜெயம் ரவி மாறுவேஷம் போட்டு நடித்திருப்பார். இந்நிலையில், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வெண் தாடி வேந்தராக பொன்னியின் செல்வன் புகழ் ஜெயம் ரவி மாறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான ரவி அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இன்று வரை ஜெயம் ரவியாகவே சினிமாவில் அழைக்கப்பட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் தந்தது.

மினிமம் கியாரண்டி ஹீரோ

மினிமம் கியாரண்டி ஹீரோ

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றியடைந்துள்ளன. சகலகலா வல்லவன் உள்ளிட்ட சில படங்கள் தான் சொதப்பல் ஆகி உள்ளன. எப்போதுமே மினிமம் கியாரண்டி ஹீரோவாகவே கோலிவுட்டில் கொண்டாடப்பட்டு வரும் அவருக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். கோமாளி படம் வெற்றிக்குப் பின்னர் ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் படம் பெரிய வெற்றிப் படமாக மாறியது.

ராஜ ராஜ சோழன்

ராஜ ராஜ சோழன்

சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ராஜ ராஜ சோழனாக நடிக்கும் வாய்ப்பு நடிகர் ஜெயம் ரவிக்கு கிடைக்க வேண்டும் என எழுதி இருக்கிறது போல, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் ஜெயம் ரவி.

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 2

இந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாக உள்ளது. ஆதித்த கரிகாலன் கொல்லப்படுவதும், கடலில் இருந்து விழுந்த அருள்மொழி வர்மன் மீட்கப்பட்டு அரியணை ஏறும் போது செய்யப் போகும் வரலாற்று விஷயத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் அடுத்த மாதத்தில் இருந்து ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகிலன் என்னாச்சு

அகிலன் என்னாச்சு

கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்துடனே ஜெயம் ரவி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான அகிலன் படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அகிலன் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. ஆனால், பல மாதங்கள் கடந்த நிலையில், இன்னமும் அந்த படத்தின் ரிலீஸ் குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்

சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்

இந்நிலையில், வெள்ளை தாடியுடன் புதிய கெட்டப்பில் வயதான லுக்குடன் ஜெயம் ரவி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. யங்காக நான் சும்மாவே சீனுடி என ஸ்கூல் பையனாகவே கோமாளி படத்தில் நடித்த சாக்லேட் பாய் ஜெயம் ரவியா இப்படி வயதான தோற்றத்திற்கு மாறிவிட்டார் எந்த படத்திற்காக இந்த லுக் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். கூடவே பிக் பாஸ் வருண் இருப்பதால் வேல்ஸ் நிறுவனத்தின் புதிய படத்தில் தான் இந்த லுக்கா என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

ஹீரோக்களுக்கு வயசாகுது

ஹீரோக்களுக்கு வயசாகுது

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களே ரொம்ப காலம் கழித்து இப்போதான் தங்களது வயதான தோற்றத்தை காட்டி நடித்து வருகின்றனர். ஆனால், நடிகர் அஜித் அந்த ரூல்ஸை பிரேக் பண்ண நிலையில், விஜய், ஜெயம் ரவி என ஏகப்பட்ட நடிகர்கள் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்க ரெடியாகி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X