twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மணிரத்னத்தை இப்படியே விட்டுவிடக் கூடாது… கார்த்தியும் ஜெயம் ரவியும் போட்ட சீக்ரெட் ப்ளான்

    |

    சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது.

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கலந்துகொண்ட சக்சஸ் மீட் நடைபெற்றது.

    காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்: மணிரத்னம் டச்.. ஹாசினி சிண்ட்ரோம்.. இளைஞர்களை கவர்ந்ததா? காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்: மணிரத்னம் டச்.. ஹாசினி சிண்ட்ரோம்.. இளைஞர்களை கவர்ந்ததா?

    பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்டம்

    பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்டம்

    லைகா தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் பார்ட் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மணிரத்னம் இயக்கிய இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் தாறுமாறான வசூலை நிகழ்த்திக் காட்டியது. இதுவரை 500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படும் பொன்னியின் செல்வன், இன்றும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

    ஜெயம் ரவி பேச்சு

    ஜெயம் ரவி பேச்சு

    இந்நிகழ்ச்சியில் லைகா தலைவர் சுபாஸ்கரன், மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஜெயம் ரவி, "நல்ல படைப்பை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்று பெரும் வெற்றியை பதிவு செய்த பத்திரிக்கையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி. உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் படத்திற்கு சிறப்பான விமர்சனம் கிடைத்துள்ளது. இது எல்லாத்துக்கும் இயக்குநர் மணிரத்னம் தான் காரணம். அவர் 40 வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவில் கலை சேவை செய்து வருகிறார். பொன்னியின் செல்வன் வெற்றியை எப்படி கொண்டாடுவது என துல்லியமாக தெரியவில்லை. அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. மணி சார், சுபாஸ்கரன் சார் இருவருக்கும் மகிழ்ச்சி கலந்த வெற்றியைக் கடந்த வாழ்த்துகள்" என்றார்.

    அப்படியே விட்டுவிட முடியாது

    அப்படியே விட்டுவிட முடியாது

    தொடர்ந்து பேசிய அவர், "இப்படி ஒரு பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்துவிட்டு எதுவும் தெரியாத மாதிரி மணிரத்னம் அமைதியாக இருக்கிறார். ஆனால், நாம் அவரை கொண்டாட வேண்டும். அவரின் கண் முன்னால், அவரை வைத்துக்கொண்டு அனைவரும் பேச வேண்டும். அவர் தமிழ் சினிமாவில் பொக்கிஷம். அவரை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும்" என்றார். பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்த ஜெயம் ரவிக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. ராஜராஜசோழன் கேரக்டருக்கு ஜெயம் ரவி சரியாக செட்டாகிவிட்டார் என ரசிகர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    வழிமொழிந்த வந்தியத்தேவன்

    வழிமொழிந்த வந்தியத்தேவன்

    ஜெயம் ரவியை தொடர்ந்து வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்திருந்த கார்த்தி பேசினார். அப்போது "பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. அதேபோல், பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு இடத்திற்கும் பயணித்த அனுபவமும் புதிது. இது தமிழ் சினிமாவின் படமல்ல. தமிழ்நாட்டின் படம். முக்கியமான கதையை இந்தியா முழுவதும் சென்று, அறிமுகப்படுத்தியுள்ளோம். இது பான் இந்தியா சீசன் என்பதால், இந்த படத்தைப் பற்றி தமிழில் மட்டுமல்லாமல், ஏனைய இந்திய மொழிகள் பேசும் மக்களிடத்திலும் சென்று அறிமுகப்படுத்தினோம்" என்றார்.

    இயக்குநருக்கு பாராட்டு

    இயக்குநருக்கு பாராட்டு

    மேலும், "பொன்னியின் செல்வனை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி. இந்த படத்தை இயக்க வேண்டும் என்று யாரும் மணிரத்னத்தை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் மணி சார் தான், நான் கூடுதல் சுமையை தூக்குவேன். இதனை தூக்குவதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறேன் என்று சொல்லி, பொறுப்பை உணர்ந்து எங்களை எல்லாம் ஒருங்கிணைத்து வழிநடத்தினார். உலகில் உள்ள அனைவரும் கொண்டாடும் வகையில் ஒரு படைப்பை வழங்கியதற்கும் நெஞ்சார்ந்த நன்றி'' என பேசினார். பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது கார்த்தியின் வந்தியத்தேவன் கேரக்டர் தான். ரஜினி, கமல் என உச்ச நட்சத்திரங்கள் நடிப்பதற்காக தவம் கிடந்த வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளது, அவரது கேரியரில் ரொம்பவே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயம் ரவியும் கார்த்தியும் இயக்குநர் மணிரத்னத்தை கொண்டாட வேண்டும் என கூறியது, ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Mani Ratnam directed Ponniyin Selvan film was made a huge hit in theatres. A success meet of Ponniyin Selvan film was held to celebrate this. Speaking on it, Jayam Ravi and Karthi highly praised director Mani Ratnam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X