நயன்தாரா உடன் மீண்டும் இணையும் ஜெயம் ரவி.. அப்படியொரு டைட்டிலை வைத்த இயக்குநர் அகமது!

சென்னை: இயக்குநர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள புதிய படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொன்னியின் செல்வன், அகிலன் என அடுத்து இரண்டு பெரிய படங்களை களமிறக்க காத்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.

இந்நிலையில், தனி ஒருவன் கூட்டணியில் அமைய உள்ள இந்த படத்திற்கு செம சூப்பரான டைட்டிலை இயக்குநர் அகமது தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இயக்குநர் அகமது

இயக்குநர் அகமது

2009ம் ஆண்டு ஜெய் மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான வாமனன் படத்தை இயக்கி இருந்தார் இயக்குநர் அகமது. அதன் பிறகு, 2013ல் ஜீவா, வினய், சந்தானம் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான என்றென்றும் புன்னகை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மனிதன் படத்தையும் இயக்கியவர் இவர் தான்.

பெண்டிங் படம்

பெண்டிங் படம்

ஜெயம் ரவி மற்றும் நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகி வந்த ஜன கண மன திரைப்படம் நீண்ட காலமாக பெண்டிங்கில் உள்ளது. பெரும்பகுதி படம் படப்பிடிப்பு நடத்தப்பட்டு விட்டதாகவும் வெளிநாட்டு போர்ஷன்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த படத்தை இயக்கி வரும் அகமது மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நயன்தாரா தான் ஹீரோயின்

நயன்தாரா தான் ஹீரோயின்

அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குநர் அகமது இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன டைட்டில்

என்ன டைட்டில்

இறைவன் பெரியவன் என்கிற டைட்டிலில் இயக்குநர் அமீர் ஒரு படத்தை இயக்கி வரும் நிலையில், இயக்குநர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்க உள்ள இந்த படத்திற்கு இறைவன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போகிறாராம்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட பொன்னியின் செல்வன் படத்தில் டைட்டில் ஹீரோ பொன்னியின் செல்வனாகவே ஜெயம் ரவி நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 30ம் தேதி அந்த படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த உள்ளது. மேலும், ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகப் போவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X