»   »  பூலோகம்.... ஆண்டு இறுதியில் சிக்ஸர் அடித்த ஜெயம் ரவி!

பூலோகம்.... ஆண்டு இறுதியில் சிக்ஸர் அடித்த ஜெயம் ரவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆண்டின் இறுதி வாரத்தில் வெளியாகியுள்ள பூலோகம் ஜெயம் ரவிக்கு பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை வெற்றிகரமான ஹீரோ என்றால் அது ஜெயம் ரவிதான்.


இந்த ஆண்டு மட்டும் அவர் நடித்த நான்கு படங்கள் - ரோமியோ ஜூலியட், சகலகலா வல்லவன், தனி ஒருவன் மற்றும் பூலோகம் - வெளியாகின.


Jayam Ravi completes 2015 with another Super hit

இந்த நான்கில் ரோமியோ ஜூலியட் ஹிட் ரகம் என்றால், சகலகலா வல்லவன் பரவாயில்லை ரகம்.


தனி ஒருவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஜெயம் ரவியை முன்னணி நாயகனாகவும் இந்தப் படம் உயர்த்தியது.


இந்த நிலையில் ஜெயம் ரவி, த்ரிஷா நடித்து இரண்டு ஆண்டுகளாக பெட்டியில் கிடந்த பூலோகம் படம் இன்று உலகெங்கும் வெளியானது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் படத்துக்கு பிரமாதமான வரவேற்பு.


எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்ற ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு இனிய அதிர்ச்சியாக இருந்ததை, அவர்கள் சமூக வலைத் தளப் பதிவுகளில் பார்க்க முடிந்தது.


ஒரு சிக்ஸரடித்து இன்னிங்ஸை நிறைவு செய்வது போல, இந்த ஆண்டை முடித்திருக்கிறார் ஜெயம் ரவி.

English summary
Jayam Ravi's Bhoologam movie is getting good response from public and become super hit in box office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil